Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் குலசேகரா, தனஞ்செயாவுக்கு தடை!

Chennai Super Kings likely to drop Lanka recruits
சென்னை: இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள இலங்கை வீரர்களான நிவான் குலசேகரா மற்றும் அகிலா தனஞ்செயா ஆகியோரை போட்டிகளில் இருந்து நீக்கி வைக்க அந்த அணி முடிவு செய்துள்ளது.

ஏப்ரல் 3ம் தேதி தொடங்கும் ஐபிஎல்-6வது போட்டிகளில் இந்த இருவரும் இடம் பெற மாட்டார்கள் என்று தெரிகிறது.

தமிழகத்தில் இலங்கை வீரர்கள் விளையாடக் கூடாது என்று தமிழக அரசு கருதுவதையடுத்து இந்த நடவடிக்கையை சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்துள்ளது.

அதே நேரத்தில் மற்ற அணிகளில் விளையாடும் குமார் சங்ககாரா, லசித் மலிங்கா, ஆன்ஜெலோ மாத்யூஸ், அஜந்தா மென்டில், மகில ஜெயவர்த்தனே ஆகியோரை சென்னை போட்டிகளில் பங்கேற்க வேண்டாம் என்று ஐபிஎல் கோராது என்றே தெரிகிறது.

அதே நேரத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, தமிழக அரசின் கோபத்துக்கு பயந்து, தனது அணியில் உள்ள வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுத்தி வைக்கவுள்ளது.

சென்னை அணியில் இந்த ஆண்டு தான் தனஞ்செயா சேர்க்கப்பட்டார்.

Story first published: Tuesday, March 26, 2013, 9:29 [IST]
Other articles published on Mar 26, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+