
சாம்பியன்ஸ் லீக் டிராபி போட்டி
இந்த வருட சாம்பியன்ஸ் லீக் டிராபி போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. செப்டம்பர் 17ம்தேதி தொடங்கி அக்டோபர் 6ம் தேதி வரை போட்டிகள் நடைபெறும்.

தகுதிச் சுற்றுப் போட்டிகள்
செப்டம்பர் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

2010ல் கோப்பை
2010ம்ஆண்டு நடந்த போட்டியின்போது டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது.

பி பிரிவில்
தற்போதைய போட்டியில் பி பிரிவில் சென்னை உள்ளது. இப்பிரிவில் டைட்டன்ஸ், பிரிஸ்பேன் ஹீட், டிரினிடாட் டொபாகோ ஆகிய அணிகள் உள்ளன. மேலும் ஒரு குவாலிபயர் அணியும் இடம் பெறவுள்ளது.

ராஞ்சியில் முதல் போட்டி
சென்னையின் முதல் போட்டி ராஞ்சியில் செப்டம்பர் 22ம் தேதி நடைபெறுகிறது. அதில், டைட்டன்ஸ் அணியுடன் சென்னை மோதும்.

கேப்டன் சாதனை
இதுவரை சென்னை அணிக்கு சாம்பின்ஸ் லீக் தொடரில் 13 போட்டிகளுக்குத் தலைமை தாங்கியுள்ளார் டோணி. செப்டம்பர் 22ம் தேதி நடைபெறும் போட்டி அவருக்கு கேப்டனாக 14வது போட்டியாகும். இது ஒரு சாதனையாகும்.

இவர்தான் ஜாஸ்தி
சாம்பியன்ஸ் லீக் தொடரில் அதிக போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தவர் டோணி மட்டுமே. இவருக்கு அடுத்த இடத்தில் 12 போட்டிகளுடன் மேற்கு இந்தியத் தீவுகளின் டேரன் கங்கா, அதே 12 போட்டிகளுடன் கம்பீர் ஆகியோர் உள்ளனர்.


Click it and Unblock the Notifications