ஐசிஎல் அணிகளுக்கு பிசிசிஐ எதிர்ப்பு: கவுன்டி அணிகள் நிராகரிப்பு

இங்கிலாந்தில் வருகிற செப்டம்பர் மாதம் சாம்பியன்ஸ் லீக் டுவென்டி 20 போட்டித் தொடர் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளவுள்ள கவுன்டி அணிகளில் ஐசிஎல் வீரர்களை சேர்க்கக் கூடாது என லலித் மோடி எச்சரித்துள்ளார்.
இதற்கு கவுன்டி அணிகளிடையே கடும் எதிர்ப்பும், எரிச்சலும் கிளம்பியுள்ளது. லலித் மோடியின் உத்தரவை ஏற்க முடியாது என்று கவுன்டி அணிகள் கூறியுள்ளன.
இதுகுறித்து லங்காஷயர் அணியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஐசிஎல் அணிகளின் வீரர்களை சேர்க்கக்கூடாது என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எந்த உத்தரவையும் எங்களுக்குப் பிறப்பிக்கவில்லை.
எங்களது தற்போதைய ஒரே எண்ணம் கோப்பையை வெல்வது மட்டுமே. மற்றவை பற்றிநாங்கள் கவலைப்படப் போவதில்லை. சிறந்த வீரர்களை, அவர்கள் ஐசிஎல் வீர்ரகளாக இருந்தாலும் சரி, நல்ல வீரர்களை அணியில் சேர்ப்பதில் எங்களுக்கு எந்தத் தடையும் இல்லை என்றார்.
இங்கிலாந்தின் கவுன்டி அணிகளில் மிடில்செக்ஸ், எஸ்ஸக்ஸ், சோமசர்சட் ஆகியவற்றைத் தவிர மற்ற அனைத்து அணிகளிலும் ஐசிஎல் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 20 ஐசிஎல் வீரர்கள் பல்வேறு கவுன்டி அணிகளில் பங்கேற்றுள்ளனர்.
மோடியின் எச்சரிக்கைக்கு நாட்டிங்காம்ஷயர், சஸ்ஸக்ஸ், துர்ஹாம் உள்ளிட்ட பல்வேறு அணிகளின் செய்தித் தொடர்பாளர்களும், மேலாளர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:18 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications