Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கெய்ல், போலார்ட், 'சரவணன்'... எல்லோரும் கேப்டனாயிட்டாங்கப்பா!

பிரிட்ஜ்டவுன்:அதிரடி வீரர்கள் கிறிஸ் கெய்ல், கீரன் போலார்ட் மற்றும் ராம் நரேஷ் சர்வான் ஆகியோர் முதல் முறையாக கேப்டனாகியுள்ளனர்.

இந்தியாவின் ஐபிஎல்லைப் போலவே மேற்கு இந்தியத் தீவுகளிலும் கரீபியன் பிரீமியர் லீக்.. அதாவது சிபிஎல் என்று ஆரம்பித்துள்ளனர்.

மொத்தம் 6 அணிகள் இதில் பங்கேற்கின்றன. இதற்கான கேப்டன்களை பிரிட்ஜ்டவுனில் வைத்து சிபிஎல் நிர்வாகிகள் அறிவித்தனர்.

ஈயடிச்சான் காப்பி...

ஈயடிச்சான் காப்பி...

ஐபிஎல் வந்தாலும் வந்தது, ஹிட் ஆனாலும் ஆனது.. வரிசையாக பலரும் காப்பி அடிக்க ஆரம்பித்து விட்டனர்.

முதல் காப்பி குடித்த இலங்கை

முதல் காப்பி குடித்த இலங்கை

இலங்கைதான் முதன் முதலில் காப்பி அடித்த அணியாகும். ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் என்ற பெயரில் அவர்கள் காப்பி அடித்தனர்.

அடுத்து வங்கத்து சிங்கங்கள்

அடுத்து வங்கத்து சிங்கங்கள்

அடுத்து வங்கதேசம் காப்பி அடித்தது. அவர்கள் பெங்கால் பிரீமியர் லீக் என்ற பெயரில் இதை நடத்தி வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவும்...

ஆஸ்திரேலியாவும்...

ஆஸ்திரேலியாவிலும் பிக் பாஷ் என்ற பெயரில் கிட்டத்தட்ட ஐபிஎல் போலவே பெயர் வைத்து டுவென்டி 20 தொடரை உருவாக்கியுள்ளனர்.

இப்போது சிபிஎல்

இப்போது சிபிஎல்

இந்த வரிசையில் புதிதாக சேர்ந்துள்ளது சிபிஎல். மொத்ம் 6 அணிகளுடன் போட்டிகள் நடைபெறவுள்ளன.

கேப்டன்கள் ரெடி...

கேப்டன்கள் ரெடி...

6 அணிகளின் கேப்டன்களையும் சிபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. 6 பேருமே மேற்கு இந்தியத் தீவுகள் அணியைச் சேர்ந்தவர்கள்தான்.

சர்வானுக்கு கயானா அமேசான் வாரியர்ஸ்

சர்வானுக்கு கயானா அமேசான் வாரியர்ஸ்

மேற்கு இந்தியத் தீவுகள் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள ராம் நரேஷ் சர்வான், கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேயன் பிராவோவுக்கு டி அன் டி ரெட் ஸ்டீல்

வேயன் பிராவோவுக்கு டி அன் டி ரெட் ஸ்டீல்

மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் தற்போதைய கேப்டன் வேயன் பிராவோ, டிரினிடாட் அன்ட் டொபாகோ ரெட் ஸ்டீல் அணியின் கேப்டனாகியுள்ளார்.

சமிக்கு செயின்ட் லூசியா ஸோக்ஸ்

சமிக்கு செயின்ட் லூசியா ஸோக்ஸ்

டேரன் சமி, செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜமைக்கா தல்லவாஸ் கெய்ல்

ஜமைக்கா தல்லவாஸ் கெய்ல்

அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல், ஜமைக்கா தல்லவாஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

சாமுவேல்ஸுக்கு ஆண்டிகுவா ஹாக்ஸ்பில்ஸ்

சாமுவேல்ஸுக்கு ஆண்டிகுவா ஹாக்ஸ்பில்ஸ்

ஆண்டிகுவா ஹாக்ஸ்பில்ஸ் அணியின் கேப்டனாக மார்லான் சாமுவேல்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பார்படாஸுக்கு போலார்ட்

பார்படாஸுக்கு போலார்ட்

கீரன் போலார்ட், பார்படாஸ் டிரைடன்ட்ஸ் அணியின் கேப்டனாகியுள்ளார்.

எல்லோரும் முதல் முறையாக

எல்லோரும் முதல் முறையாக

போலார்ட், கெய்ல், சர்வான் ஆகியோர் முதல் முறையாக கேப்டனாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, July 4, 2013, 12:43 [IST]
Other articles published on Jul 4, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+