சென்னை: தமிழக முதல்வர் அணிக்கும், தெற்கு ஆஸ்திரேலிய மாகாண முதல்வர் அணிக்கும் சென்னையில் வரும் 16ம் தேதியன்று கண்காட்சி கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது.
தெற்கு ஆஸ்திரேலியா மாகாண முதல்வர் மைக்ரான் இந்தியாவில் வரும் 23ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது அவருடன் 11 பேர் கொண்ட கிரிக்கெட் அணியும் தமிழ்நாடு வருகிறது.
நல்லிணக்கத்தின் அடிப்படையில் தெற்கு ஆஸ்திரேலிய லெவனுடன், தமிழக முதல்வர் லெவன் மோதும் கண்காட்சி கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்டாலின் கேப்டன்:
முதல்வர் அணிக்கு உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேப்டனாக இருப்பார்.
ஸ்டாலின் தலைமையிலான அணியில் அமைச்சர்கள் பொன்முடி, பூங்கோதை, வெள்ளக்கோவில் சாமிநாதன், கே.ஆர்.பெரியகருப்பன், கே.பி.பி.சாமி ஆகியோர் விளையாடுகிறார்கள்.
முதல்வர் கருணாநிதி தீவிர கிரிக்கெட் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த காட்சி போட்டி வரும் 16ம் தேதி பிற்பகல் சென்னை பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது.