Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வலுக்கிறது அக்தர் சர்ச்சை

Aktar
கராச்சி: பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தொடர்பான சர்ச்சை வலுத்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுப்பியுள்ள நோட்டீஸுக்கு பதில் அளிக்கப் போவதில்லை என்று அக்தர் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் உடல் தகுதியைக் காரணம் காட்டி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய ஒப்பந்த வீரர்கள் பட்டியலிலிருந்து அக்தர் நீக்கப்பட்டார். இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக சாடி அக்தர் பேட்டி அளித்திருந்தார்.

இதனால் கடுப்பான கிரிக்கெட் வாரியம் அக்தருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. ஒரு வாரத்திற்குள் பதில் தர வேண்டும் எனவும் அது உத்தரவிட்டது.

ஆனால் இந்த நோட்டீஸுக்கு தான் பதில் அளிக்கப் போவதில்ைல என்று அக்தர் கூறியுள்ளார். மேலும் கிரிக்கெட் வாரியத்தை மறுபடியும் சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய ஊதிய ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இல்லை. அப்படி இருக்கும்போது கிரிக்கெட் வாரியம் என்னைக் கேள்வி கேட்க முடியாது. நானும் அவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

பாகிஸ்தானில் கிரிக்கெட் பிட்சுகள் படு மோசமானவை. ஆடுவதற்கேற்ற தகுதியில் அவை இல்ைல. உயிற்ற அந்த பிட்ச்களில் விளையாடுவது மிகவும் மோசமான அனுபவமாக இருக்கும் என்று கூறியுள்ளார் அக்தர்.

அக்தரின் இந்தப் பதிலால் கிரிக்கெட் வாரியம் பெரும் கோபமடைந்துள்ளது. அவர் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.

ஏற்கனவே சக வீரர் முகம்மது ஆசிப்பை பேட்டால் அடித்த சம்பவத்தில் அவருக்கு 13 போட்டிகளில் ஆட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது. அதன் பின்னர் அந்தத் தண்டனை நீக்கப்பட்டு, 2 ஆண்டுகளுக்கு அவரை கண்காணிப்பில் வைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது.

இந்த நிலையில், அக்தர் கிரிக்கெட் வாரியம் மீது கடுமையாக பாய்ந்துள்ளதால் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படக் கூடும் என்று பாகிஸ்தானில் பரபரப்பு எழுந்துள்ளது.

இருப்பினும் 18ம் தேதி வரை காத்திருக்கப் போவதாகவும், அதற்குள் அக்தர் பதில் அளித்தால் நல்லது என்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:10 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+