Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யுவராஜ் சிங் ரொம்ப டேஞ்சரானவர்... இங்கிலாந்து அணிக்கு பீட்டர்சன் எச்சரிக்கை

Yuvraj Singh and Kevin Pietersen
டெல்லி: இங்கிலாந்து அணிக்கு யுவராஜ் சிங் மிகவும் அச்சுறுத்தலாக இருப்பார். அவரது சமீபத்திய பார்ம் அவ்வளவு சிறப்பாக உள்ளது என்று இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணி இந்தியாவுடன் ஒரு நாள் போட்டிகளில் ஆடவுள்ளது. ஜணவரி 11ம் தேதி முதல் போட்டி நடைபெறுகிறது.

இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் வாய்ப்புகள் குறித்தும், இந்திய வீரர்கள் குறித்தும் கெவின் பீட்டர்சன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவின் உலகக் கோப்பை நாயகன் யுவராஜ் சிங் அபாயகரமான பேட்ஸ்மேன் மட்டுமல்லாமல் நல்ல பந்து வீச்சாளரும் கூட. இங்கிலாந்து அணிக்கு அவர் அச்சுறுத்தலாக இருப்பார்.

எந்த நேரத்திலும் ஆட்டத்தைத் தன் பக்கம் திருப்பி விடும் அபாயகரமானவர் அவர். அவரை சீக்கிரம் அவுட்டாக்கினால்தான் இங்கிலாந்துக்கு நல்லது. அதற்கு முயல வேண்டும் என்றார் பீட்டர்சன்.

சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டுவென்டி 20 போட்டிகளில் 6 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார் யுவராஜ். அதேபோல பாகிஸ்தானுக்கு எதிரான டுவென்டி 20 தொடரிலும் 82 ரன்கள் எடுத்திருந்தார் யுவராஜ் சிங்.

Story first published: Wednesday, January 9, 2013, 13:02 [IST]
Other articles published on Jan 9, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+