Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெங்களூரை வீழ்த்திய டெல்லி-ராஜஸ்தானை வென்ற பஞ்சாப்

கேப்டவுன்: கேப்டவுனில் நடந்த ஐபிஎல் டுவென்டி-20 தொடரின் லீக் ஆட்டத்தில் டெல்லி டேர் டெவில்ஸ் அணி, பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியையும், பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும் வென்றன.

ஐபிஎல் டுவென்டி-20 தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. நேற்று நடந்த முதல் லீக் போட்டியில் டெல்லி டேர் டெவில்ஸ், பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியை எதிர் கொண்டது. மனைவியின் பிரசவம் காரணமாக டிராவிட் இப்போட்டியில் பங்கேற்கவில்லை. அவர் இந்தியா திரும்பிவிட்டார்.

டாஸ் வென்ற பெங்களூர் முதலில் பேட் செய்தது. துவக்க வீரர்களாக வந்த காலிஸ் ட்க் அவுட்டானார். உத்தப்பா 3 ரன்களுக்கு நடையை கட்டினார். அடுத்து வந்த பீட்டர்சன் அதிரடியாக 25 பந்தில் 37 ரன்கள் எடுத்து, நிலைமையை ஓரளவு சமாளித்தார்.

ரோஸ் டெய்லர் 31, கோஹ்லி 22 ரன்களுக்கு அவுட்டானார்கள். பவுச்சர் 28 பந்தில் 36 ரன்கள் எடுத்தார். பெங்களூர் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு சேவக், காம்பீர் ஜோடி கைகொடுக்கவில்லை. காம்பீர் 16, சேவக் 7 ரன்களுக்கு அவுட்டானார்கள். அடுத்து வந்த தில்ஷன் 47 பந்தில் 67 ரன்கள் விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல், அணிக்கு வெற்றி தேடி தந்தார். டிவிலியர்ஸ் 21, மன்ஹாஸ் 23 இவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர்.

டெல்லி டேர் டெவில்ஸ் 19.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

பஞ்சாப் அபாரம்...

நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ அணி, ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொண்டது. பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள் மோசமாக விளையாடினார்கள். கேப்டன் யுவராஜ் 2 ரன்களுக்கு அவுட்டானார். சங்ககரா 60 ரன்கள் எடுத்து, ஆறுதல் தந்தார்.

இர்பான் பதான் கடைசி கட்டத்தில் 39 ரன்கள் எடுத்து அணி 100 ரன்களை தாண்ட உதவினார். மற்ற வீரர்கள் வந்தார்கள். போனார்கள் ரகம். பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து.

அடுத்து பேட் செய்த ராஜஸ்தான் அணிக்கு இர்பான் பதான் அதிர்ச்சி அளித்தார். இவர் துவக்க வீரர்கள் அஸ்னோத்கர் 3, ஸ்மித் 2 ஆகியோரை விரைவில் அவுட்டாக்கினார். ரவிந்திர ஜடேஜா 37 ரன்கள் எடுத்தார்.

கேப்டன் வார்ன் 34 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

Story first published: Wednesday, December 7, 2011, 18:25 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+