ஊக்க மருந்து சோதனை.. சிக்கினார் ஐபிஎல் கிரிக்கெட் வீரர் சங்வான்!
டெல்லி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் ஆடிய வேகப் பந்து வீச்சாளர் பிரதீப் சங்வானுக்கு நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் பாசிட்டிவ் என்று முடிவு வந்துள்ளது.
ஏற்கனவே 6வது ஐபிஎல் தொடரில் ஸ்பாட் பிக்ஸிங் சர்ச்சை பெருமளவில் கிளம்பி பலரைக் கைது செய்து உள்ளே தள்ளச் செய்தது.
இந்த நிலையில் தற்போது ஊக்க மருந்து சர்ச்சை புறப்பட்டுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடியவரான சுழற்பந்து வீச்சாளர் பிரதீப் சங்வான் ஊக்க மருந்து உட்கொண்டது நிரூபணமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

2வது வீரர்
கிரிக்கெட் வரலாற்றில் ஊக்க மருந்து உட் கொண்டதாக சிக்கியுள்ள 2வது வீரராக சங்வான் உருவெடுத்துள்ளார்.

ஏற்கனவே சிக்கியவர் ஆசிப்
ஏற்கனவே இதேபோன்ற பிரச்சினையில் சிக்கினார் பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சாளர் முகம்மது ஆசிப் என்பது நினைவிருக்கலாம்.

ஆமா... சங்வான் ஊக்க மருந்து உட்கொண்டார்
இதுகுறித்து கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆமாம், சங்வானுக்கு நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் அவர் ஊக்க மருந்தை ஐபிஎல் போட்டியின்போது பயன்படுத்தியது சோதனையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கட் சங்கத்திற்கு விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பியுள்லோம். இது ஏ சாம்பிள் சோதனையாகும் என்றார்.

பி சோதனையில் உறுதியாகும்
மேலும் அவர் கூறுகையில், பி சாம்பிள் சோதனையின்போதுதான் சங்வான் உட் கொண்டது தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தா இல்லையா என்பது தெரிய வரும் என்றார்.

டெல்லி வீரர் - கொல்கத்தாவுக்காக ஆடியவர்
டெல்லியைச் சேர்ந்தவர் சங்வான். 22 வயதான இவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவுக்காக ஆடியவர். டெல்லி ரஞ்சி அணியில் இடம் பெற்றவர். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்காக ஆடி வருகிறார்.

123 விக்கெட்களை வீழ்த்தியவர்
38 முதல் தர போட்டிகளில் ஆடியுள்ள இவர் 123 விக்கெட்கள வீழ்த்தியுள்ளார்.

கடந்த தொடரில் 2 போட்டிகளில்
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் இவர் 2 போட்டிகளில் மட்டுமே ஆடினார். ஆனால் விக்கெட் எதையும் வீழ்த்தவில்லை.


Click it and Unblock the Notifications