டெல்லி 3வது டெஸ்ட் போட்டி டிரா ஆனது
டெல்லி: டெல்லியில் நடந்து வந்த 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி டெல்லி, பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்து வந்தது.
முதலில் ஆடிய இந்தியா அபாரமாக ரன் குவித்து 613 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. கம்பீரும், லட்சுமணும் இரட்டை சதம் போட்டனர்.
பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி பதிலடியாக ரன்களைக் குவித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டது. அபாரமாக ஆடிய அந்த அணி 577 ரன்களைக் குவித்தது. மைக்கேல் கிளார்க் சதம் போட்டார்.
இதையடுத்து இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.
கம்பீர் 36, ஷேவாக் 16, டிராவிட் 11, சச்சின் 47 எடுத்தனர். லட்சுமண் 59 ரன்களும், கங்குலி 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
5 விக்கெட் இழப்புக்கு இந்தியா 208 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.
பின்னர் ஆஸ்திரேலியா ஆடத் தொடங்கியது. விக்கெட் இழப்பின்றி 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. போட்டி டிரா ஆனது.
ஆட்ட நாயகனாக வி.வி.எஸ்.லட்சுமண்தேர்வு செய்யப்பட்டார்.
4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நாக்பூரில் நவம்பர் 6ம் தேதி தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications