2 ஒரு நாள் போட்டிகளுக்கு திணேஷ் ராம்தின் சஸ்பெண்ட்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது ஐசிசி விதிமுறைகளுக்குப் புறம்பாக நடந்து கொண்டதற்காக இந்த தடை.
இதுதவிர அவருக்கு போட்டிக் கட்டணத்தில் 100 சதவீதம் அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுடன் நடந்த போட்டியின்போது பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் கேட்ச்சை கோட்டை விட்டது தொடர்பாக சர்ச்சையில் சிக்கினார் ராம்தின்.
அந்தக் கேட்ச் தொடர்பாக நடுவர்கள் ஸ்டீவ் டேவிஸ் மற்றும் நிகல் லாங் ஆகியோர் புகார் கூறியிருந்தனர். இதையடுத்து நடந்த விசாரணைக்குப் பின்னர் 2 போட்டிகளுக்குத் தடையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்தத் தடையை எதிர்த்து ராம்தின் அப்பீல் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Story first published: Tuesday, June 11, 2013, 13:28 [IST]
Other articles published on Jun 11, 2013


Click it and Unblock the Notifications