ஹெரால்ட் டெஸ்ட் அணியின் கேப்டன் டோணி

இந்த அணியில், இந்திய வீரர் கெளதம் கம்பீர் தொடக்க ஆட்டக்காரராக சேர்க்கப்பட்டுள்ளார். வேறு எந்த இந்தியரும் இதில் இடம் பெறவில்லை.
இந்த ஆண்டில் டெஸ்ட் வீரர்கள் செயல்பட்ட விதத்தை வைத்து கனவு டெஸ்ட் அணியை அறிவித்துள்ளது சிட்னி மார்னிங் ஹெரால்டு. ஆண்டுதோறும் இதுபோன்ற அணியை அது தேர்வு செய்து அறிவிக்கும்.
இந்த அணியின் கேப்டனாக டோணி அறிவிக்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பராகவும் இவரே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக கெளதம் கம்பீர் சேர்க்கப்பட்டுள்ளார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் தென் ஆப்பிரிக்க கேப்டன் கிரீம் ஸ்மித்.
அணியின் 12வது வீரராக சர்ச்சை நாயகன் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் இடம் பெற்றுள்ளார்.
ஹெரால்டு அணி - டோணி (கேப்டன்-விக்கெட் கீப்பர்), ஸ்மித் (தெ.ஆ), கம்பீர் (இந்தியா), ஹசீம் அம்லா (தெ.ஆ), கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து), சிவ்நரைன் சந்தர்பால் (மே.இ. தீவு), ஏப் டி வில்லியர்ஸ் (தெ.ஆ), ரியான் சைட்பாட்டம் (இங்கிலாந்து), டேல் ஸ்டெயின் (தெ.ஆ), மிட்சல் ஜான்சன் (ஆஸ்திரேலியா), அஜந்தா மென்டிஸ் (இலங்கை).
Story first published: Wednesday, December 7, 2011, 18:10 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications