டோணியும், ஹர்பஜனும் என் மகன் வாழ்க்கையை ஒழிக்கப் பார்க்கின்றனர் - ஸ்ரீசாந்த் தந்தை புகார்

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது... என் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை முற்றிலுமாக முறித்துப் போட டோணியும், ஹர்பஜன் சிங்கும் முடிவு செய்து விட்டனர். இருவரும் சேர்ந்து கூட்டு சதி செய்து எனது மகனை மாட்டி விட்டுள்ளனர்.
மிகப் பெரிய சதித் திட்டம் இதில் அடங்கியுள்ளது. ஹர்பஜன் சிங் தனக்குத் தெரிந்த பஞ்சாப் டிஎஸ்.பி மூலம் இந்த சதியை அரங்கேற்றியுள்ளார். சமீபத்தில் டோணியும் எனது மகனை மிரட்டியிருந்தார் - மீண்டும் நீ இந்திய அணிக்குள் நுழைய முடியாது என்று என சாந்தகுமாரன் நாயர் குற்றம் சாட்டியுள்ளார்.
அதேபோல ஸ்ரீசாந்த்தின் சகோதரி கணவரும், பிரபல பின்னணிப் பாடகருமான மது பாலகிருஷ்ணன் கூறுகையில், ஸ்ரீசாந்த் அப்பாவி. நல்ல வீரர். தான் சார்ந்த அணிக்காக கடுமையாக உழைக்கக்கூடியவர் என்றார்.
Story first published: Thursday, May 16, 2013, 19:00 [IST]
Other articles published on May 16, 2013


Click it and Unblock the Notifications