Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சென்னை-கோவை பகுதியில் பைக் ரேஸ் பள்ளியை துவங்க டோணி திட்டம்

சென்னை: இந்தியாவில் சிறந்த பைக் ரேஸ் வீரர்களை உருவாக்க வகையில், சென்னை மற்றும் கோவையில் பைக் ரேஸ் பள்ளிகளை துவங்க, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி. கிரிக்கெட் போட்டிகளில் தேவைக்கு ஏற்ப ஆடும் திறன் கொண்ட இவர், இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்தவர். அணியை சிறப்பாக வழி நடத்தும் திறமை கொண்ட இவர், கடந்த ஆண்டு இந்திய அணிக்கு உலக கோப்பை கிடைக்க உதவினார்.

Dhoni
இந்த நிலையில் கிரிக்கெட் போட்டியில் மட்டுமின்றி, டோணிக்கு அதிவேக பைக்களை ஓட்டுவதிலும் அதிக ஆர்வம் கொண்டவர். இதற்காக உலகில் பல முன்னணி ரேஸ் பைக்களை வாங்கி வைத்துள்ளார். மேலும் பைக் ரேஸ் போட்டிகளில் தனக்கு இருக்கும் ஆர்வம் காரணமாக, பைக் ரேஸ் அணி ஒன்றை சமீபத்தில் துவக்கி உள்ளார்.

இந்த அணிக்காக தற்போது ரேஸ்சிங் பள்ளி ஒன்றை துவங்க டோணி திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் சென்னை மற்றும் கோவையில் பைக் ரேஸ் நடத்த தேவையான ஓடுதளம் உள்ளதால், அங்கேயே பைக் ரேஸ் பள்ளியை துவங்க, டோணி திடடமிட்டுள்ளார்.

இதன்மூலம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சர்வதேச பைக் ரேஸ் போட்டியில், டோணியின் அணியை களமிறங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக தனது அணியின் பெயரை மாஹி பைக் ரேஸ் அணி என்று பெயர் மாற்றம் செய்துள்ளார். பள்ளியின் திறப்பு விழா குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, November 3, 2012, 15:59 [IST]
Other articles published on Nov 3, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+