ரேங்கிங்: டோணி முதலிடம்-சச்சினுக்கு 9வது இடம்

ஐசிசி ஒரு நாள் போட்டி வீரர்களுக்கான தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் டோணி முதலிடத்தில் இருக்கிறார். இலங்கைக்கு எதிரான 3 மற்றும் 4வது ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக ஆடியதன் மூலம் 2வது இடத்திலிருந்து அவர்முதலிடத்திற்கு முன்ேனறினார்.
803 புள்ளிகளுடன் அவர் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். 2006ம் ஆண்டு சில காலத்திற்கு டோணி முதலிடத்தில் இருந்தார். அதன் பின்னர் இப்போதுதான் முதலிடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்க கேப்டன் ஸ்மித் 2வது இடத்திலும், ஆஸ்திரேலிய கேப்டன் பான்டிங் 3வது இடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் ஹஸ்ஸி 4வது இடத்திலும், இங்கிலாந்து கேப்டன் கெவின் பீட்டர்சன் 5வது இடத்திலும், உள்ளனர்.
நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு 9வது இடம் கிடைத்துள்ளது. அதே இடத்தில்தான் அவர் இதற்கு முன்பு இருந்தார். தொடர்ந்து அதே இடத்தில் இருக்கிறார். யுவராஜ் சிங் 18வது இடத்தில் இருக்கிறார்.
பந்து வீச்சாளர்கள் தரப்பில் முதல் 20 இடங்களில் ஒரே ஒரு இந்திய பவுலர்தான் இருக்கிறார். அவர் ஜாகிர்கான். அவருக்கு கிடைத்திருக்கும் இடம் 14வது ரேங்க் ஆகும்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:16 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications