கார்பரேட் டிராபி கிரிக்கெட்-டோணி, யுவராஜ் பங்கேற்பு

இந்திய கிரிக்கெட் வாரியம் இந்தப் போட்டித் தொடரை நடத்தவுள்ளது. ஏர் இந்தியா உள்ளிட்ட 12 நிறுவன அணிகள் இதில் பங்கேற்கின்றன. ஏர் இந்தியாவிலிருந்து மட்டும் 2 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த 12 அணிகள் தவிர மேலும் 4 அணிகள் சேர்க்கப்படும் எனவும் தெரிகிறது.
செப்டம்பர் 1ம் தேதி முதல் 8ம் தேதி வரை இப்போட்டி நடைபெறவுள்ளது. சென்னை, பெங்களூர், மொஹாலி, கட்டாக், தர்மசாலா, டெல்லி ஆகிய ஊர்களில் இப்போட்டிகள் நடைபெறும்.
போட்டி நடைபெறும் மைதானங்கள் உள்ளிட்ட இதர விவரங்களை கிரிக்கெட் வாரியம் ஜூலை 27ம் தேதி அறிவிக்கவுள்ளது.
இந்தியாவின் முன்னணி வீரர்களான டோணி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், இர்பான் பதான் ஆகியோர் இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்கக் கூடும் எனத் தெரிகிறது.
இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் மாத இறுதியில், சென்னை அல்லது பெங்களூரில் பயிற்சி முகாமில் பங்கேற்க வருகிறது. இலங்கைத் தொடருக்கான பயிற்சி முகாம் இது.
இந்த முகாமுக்கு முன்பாக கார்பரேட் டிராபிப் போட்டியில் முன்னணி வீரர்கள் விளையாடும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ஏர் இந்தியா சார்பில் களமிறக்கப்படும் ஏர் இந்தியா ரெட், ஏர் இந்தியா ப்ளூ ஆகிய இரு அணிகள் சார்பில் ஆர்.பி.சிங், முகம்மது கைப், ராபின் உத்தப்பா, தவால் குல்கர்னி, சித்தார்த் திரிவேதி, நமன் ஓஜா, தீரஜ் ஜாதவ் ஆகியோர் விளையாடவுள்ளனர்.
இந்தியா சிமென்ட்ஸ் சார்பில் ராகுல் டிராவிட், பத்ரிநாத், பாலாஜி, ஹேமங் பதானி, அபினவ் முகுந்த், அஸ்வின் ஆகியோர் விளையாடவுள்ளனர்.
இவை தவிர இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஓஎன்ஜிசி ஆகியவையும் இதில் பங்கேற்கின்றன.
இந்தியன் ஆயில் அணிக்காக ரோஹித் சர்மா, வாசிம் ஜாபர், சேட்டஸ்வர் பூஜாரா உள்ளிட்டோர் விளையாடவுள்ளனர்.
பாரத் பெட்ரோலியம் அணியில், ஸ்ரீசாந்த், அபிஷேக் நய்யார், பிரக்யான் ஓஜா ஆகியோர் இடம் பெறுவர்.
ஓஎன்ஜிசி அணியில் இஷாந்த் சர்மா, முனாப் படேல், பிரவீன் குமார், அமீத் மிஸ்ரா ஆகியோர் இடம் பெறலாம்.
இன்னொரு வீரரான ஷேவாக் காயமடைந்து குணமடைந்து வருவதால் அவர் விளையாட மாட்டார். அவருக்குப் பதில் கவுதம் கம்பீர் விளையாடலாம்.
டாடா ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்காக கங்குலி விளையாடக் கூடும்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:28 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications