Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டோணிக்கு வெங்சர்கார், வடேகர் ஆதரவு

Dilip Vengsarkar
புவனேஷ்வர்: இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டன் டோணி ஒருவர்தான் ஃபார்மில் இருப்பதால் அவரை மாற்ற வேண்டியது இல்லை என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் திலீப் வெங்சர்கார், வடேகர் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

புவனேஷ்வரில் நிகழ்ச்சி ஒன்று கலந்து கொள்ள வந்த போது இருவரும் டோணியை ஆதரித்து கருட்து தெரிவித்தனர். வெங்சர்கார் கூறுகையில், பாகிஸ்தான் அணியினரி ஆட்டம் அபாரமாக இருந்தது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் அபாரமாக விளையாடுகின்றனர் கேப்டன் டோணிதான் அணியில் ஃபார்மில் இருந்து வருகிறார். இதனால் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும். அவருக்கு மாற்றாக யாரும் இல்லை என்றார்.

மேலும் உலகக் கோப்பை, டெஸ்ட் தொடர்கள், ஒருநாள் போட்டிகள், 20 ஓவர் போட்டிகள் என நிறைய போட்டிகளில் பங்கேற்பதும் இந்தியாவின் தோல்விக்கு காரணம். இங்கிலாந்து அணியுடனான போட்டிகளில் அதிரடியாக விளையாடவேண்டிய தேவை இருக்கிற்து என்றார்.

இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் டோணிக்கு பங்கு அதிகம் என்றார் வடேகர்.

Story first published: Thursday, January 10, 2013, 14:01 [IST]
Other articles published on Jan 10, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+