Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

14 வயதுக்குட்பட்டோர் அணியில் டெண்டுல்கர் மகன் தேர்வு- வெடிக்கும் சர்ச்சை!

Sachin with Son
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் 14 வயதுக்குட்பட்டோருக்கான மும்பை அணிக்கு தேர்வு செய்யப்பட்டதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

14 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு அர்ஜூன் தேர்வானதற்கு அவர் கடந்த மே மாதம் அடித்த 124 ரன்கள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் மும்பையைச் சேர்ந்த பூபென் லால்வானியோ 277 பந்துகளில் 398 ரன்களை எடுத்திருக்கிறார். டான்பாஸ்கோ பள்ளியைச் சேர்ந்த அந்த மாணவன் தேர்வாகவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அந்த மாணவரின் தந்தை, என் மகன் நிச்சய தேர்வாகிவிடுவான் என்றுதான் எதிர்பார்த்தேன். ஆனால் இப்படி நடக்கும் என நினைக்கவில்லை என்றார்.

இதே போல் 200 ரன்கள், 300 ரன்கள் எடுத்த பல மாணவர்கள் தேர்வுக் குழுவினரால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். டெண்டுல்கர் மகனைவிட சிறந்த மாணவர்கள் இருந்தும் அவர்கள் தேர்வு செய்யப்படாததால் தேர்வுக் குழுவின் நம்பகத் தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. அதுவும் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த சில நாட்களில் அர்ஜூன் டெண்டுல்கர் தேர்வானது சர்ச்சையை பெரிதாக்கியிருக்கிறது.

Story first published: Sunday, January 13, 2013, 11:17 [IST]
Other articles published on Jan 13, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+