ஏ கிரேட் பட்டியலில் தொடர்கிறார் டிராவிட் - 37 பேருக்கு புது கான்டிராக்ட்

2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரைக்குமான புதிய வீரர்கள் கான்டிராக்டை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் நான்கு கிரேடுகளாக வீரர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர்.
கிரிக்கெட் வாரிய செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏ கிரேட் பட்டியலில் வீரேந்திர ஷேவாக், கெளதம் கம்பீர், ஹர்பஜன் சிங், வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் புதிதாக சேர்ந்துள்ளனர். இந்தப் பட்டியலில் ஏற்கனவே உள்ள சச்சின், டிராவிட், டோணி, ஜாகிர்கான், யுவராஜ் சிங் ஆகியோர் தொடர்ந்து அப்பட்டியலில் நீடிப்பார்கள்.
இந்த 9 பேருக்கும் வருடத்திற்கு ரூ. 60 லட்சம் சம்பளமாக வழங்கப்படும்.
இஷாந்த் சர்மா, பத்ரிநாத், ரோஹித் சர்மா, ஆகியோர் டி கிரேடிலிருந்து பி கிரேடுக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். பி கிரேடில் சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், ஆர்.பி.சிங், முனாப் படேல் ஆகியோரும் உள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 40 லட்சம் சம்பளம் தரப்படும்.
பி கிரேடில் இதுவரை இருந்து வந்த திணேஷ் கார்த்திக் டி கிரேடுக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதேபோல பி கிரேடில் இருந்து வந்த வாசிம் ஜாபர், ஸ்ரீசாந்த் ஆகியோர் சி கிரேடுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர யூசுப் பதான், பையூஷ் சாவ்லா, பிரவீன் குமார், பிரக்யான் ஓஜா, அமீத் மிஸ்ரா ஆகியோரும் சி கிரேடில் உள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 25 லட்சம் சம்பளம் கிடைக்கும்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:09 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications