முரளீதரன் மீது முட்டை வீச்சு: ஆஸி. ரசிகர்கள் அட்டூழியம்

ஆஸ்திரேலியாவில் நாளை இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா பங்குபெறும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக இலங்கை அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது.
இலங்கை அணியின் வீரர்கள், நேற்றிரவு ஹோபர்ட்டில் இரவு உணவை சாப்பிட்டு விட்டு தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது சுழற்பந்து வீச்சாளர் முரளீதரன் மீது ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் முட்டையை வீசி எறிந்தனர்.
தகவல் அறிந்தவுடன் போலீசார் விரைந்து வந்து வீரர்களை பாதுகாப்பாக அவர்களை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.
இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவிற்கு இலங்கை அணி சுற்றுப்பயணம் வந்த போதும் முரளீதரனை ஆஸ்திரேலிய ரசிகர்கள் கேலி செய்துள்ளனர்.
முரளீதரனின் பந்துவீச்சை ஆஸ்திரேலிய நடுவர்கள் குறை கூறினாலும், அதன் பின்னர் நடந்த சோதனையில் அவரின் பந்து வீச்சில் எந்த தவறும் இல்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:10 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications