For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இங்கிலாந்தை வீழ்த்தி கடைசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது இந்தியா

எட்பாஸ்டன்: கடைசி சாம்பியன்ஸ் டிராபி என்ற பெயரைக் கொண்டி 2013ம் ஆண்டின் சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்தியா அட்டகாசமாக வென்றுள்ளது.

இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்து சாம்பியன் பட்டத்தைப் பெர்றது.

பேட்டிங்கிலும், பின்னர் பவுலிங் மற்றும் பீல்டிங்கிலும் பிரமாதப்படுத்திய இந்தியா, இங்கிலாந்து அணியை கடைசிப் பந்தில் வைத்து தோற்கடித்தது.

2வது முறையாக சாம்பியன்

இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வெல்வது இது 2வது முறையாகும். இதற்கு முன்பு 2002ம் ஆண்டு இந்தியாவும், இலங்கையும் கூட்டாக கோப்பையை வென்றதாக அறிவிக்கப்பட்டன. மழையால் இறுதிப் போட்டி பாதிக்கப்பட்டது.

விளையாடி முதல் வெற்றி

ஆனால் முதல் முறையாக விளையாடி கோப்பையை வெல்வது இந்தியாவுக்கு இதுவே முதல் முறையாகும்.

முன்னதாக இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களைக் குவித்தது. ரவீந்திர ஜடேஜாவின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா வேகமாக 120 ர ன்களைத் தாண்டியது. ஆட்டமிழக்காமல் 33 ரன்களைக் குவித்தார் ஜடேஜா.

முன்னதாக 34 பந்துகளில் 43 ரன்களைக் குவித்து வெளியேறினார் கோஹ்லி.

 ICC Champions Trophy

ஒரு நாள் போட்டியான இது மழை காரணமாக டுவென்டி 20 போட்டியாக மாறிப் போனது. டாஸ் வென்ற இங்கிலாந்து இந்தியாவை முதலில் பேட் செய்யப் பணித்தது.

ரோஹ்தி சர்மாவும், ஷிகார் தவனும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ரோஹித் சர்மா 9 ரன்கள் எடுத்தநிலையில் போல்ட் ஆனார். மறு முனையில் ஷிகார் தவன் அதிரடியாக ஆடி வந்தார். 24 பந்துகளில் 31 ரன்களை எடுத்திருந்த நிலையில் அவர் ரவி போபரா பந்தில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் வந்த திணேஷ் கார்த்திக் 6 ரன்னிலும், சுரேஷ் ரெய்னா ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தார்.

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி கடைசி வரை போராடிப் பார்த்தது. இருப்பினும் கடைசிப் பந்தில் 6 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் அது அதை எடுக்க முடியாமல் போனது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது இங்கிலாந்து. அவரைத் தொடர்ந்து கேப்டன் டோணி சற்றும் எதிர்பாராத வகையில், ரவி போபரா பந்தில் டிரெட்வெல்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இருப்பினும் கோஹ்லியும், ஜடேஜாவும் இணைந்து அழகாக ஆடினர். ஜடேஜா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 33 ரன்களைக் குவித்துக் களத்தில் இருந்தார். 2 சிக்ஸர்களையும், 2 பவுண்டரிகளையும் அவர் விளாசினார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களைக் குவித்தது இந்தியா.

Story first published: Monday, June 24, 2013, 7:57 [IST]
Other articles published on Jun 24, 2013
English summary
England have won the toss and elected fielding first. But the rain has stopped the start of the play.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+