லண்டன்: இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்ுடள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. மொத்தம் 7 ஒரு நாள் போட்டிகளில் அது விளையாடுகிறது.
நவம்பர் 6ம் தேதி வரும் இங்கிலாந்து அணி, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபடுகிறது.
முதல் ஒரு நாள் போட்டி நவம்பர் 14ம் தேதி ராஜ்காட்டில் நடக்கிறது. 17ம்தேதி இந்தூரில் 2வது போட்டியும், கான்பூரில் 20ம் தேதி 3வது போட்டியும், ஜாம்ஷெட்பூரில் 23ம் தேதி 4வது போட்டியும் நடைபெறுகின்றன.
26ம் தேதி கட்டாக்கில் 5வது போட்டியும், குவஹாத்தியில், 29ம் தேதி 6வது போட்டியும் நடைபெறும்.
இறுதி ஒரு நாள் போட்டி டெல்லியில் டிசம்பர் 2ம் தேதி நடைபெறும்.
இதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணி விவரம்:
கெவின் பீட்டர்சன் (கேப்டன்), ஆன்டர்சன், இயான் பெல், ரவி போபரா, ஸ்டூவர்ட் பிராட், காலிங்வுட், அலிஸ்டர் கூக், பிளின்டாப், ஹார்மிசன், சமித் பட்டேல், பிரையர், ஓவாசிஸ் ஷா, கிரேமி சுவான், சைடு பாட்டம், லுகே ரைட்.