Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பலத்த பாதுகாப்புடன் இந்தியா வந்தது இங்கிலாந்து அணி

சென்னை: மும்பை தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து ஒரு நாள் தொடரை ரத்து செய்து விட்டு நாடு திரும்பிய இங்கிலாந்து அணி பலத்த பரிசீலனைகள், யோசனைகளுக்குப் பின்னர் மீண்டும் இந்தியா திரும்பியுள்ளது 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் சென்னை மற்றும் மொஹாலி மைதானங்களில் நடைபெறவுள்ளன. இதில் சென்னையில் விளையாடுவதில் எந்த தயக்கமும் இல்லை என்று இங்கிலாந்து பாதுகாப்பு ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் மொஹாலி பாகிஸ்தானுக்கு அருகில் இருப்பதால் அங்கு விளையாடுவது குறித்து இங்கிலாந்து இன்னும் முடிவு செய்யவில்லை. ஒரு வேளை மொஹாலி வேண்டாம் என்று கூறினால், இப்போட்டி பெங்களூருக்கு மாற்றப்படும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில் கடைசி நிமிடம் வரை இங்கிலாந்து வருமா என்ற குழப்பம் சில நாட்களுக்கு முன்பு நீங்கியது. பயிற்சிக்காக அபுதாபி சென்ற இங்கிலாந்து அணி அங்கிருந்து நேற்று சென்னை வந்தது.

கேப்டன் கெவின் பீட்டர்சன் தலைமையிலான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி முதல் பிரிவு அதுதாபியிலிரு்நது வந்தது. பின்னர் 12 பேர் கொண்ட 2வது அணி துபாயிலிருந்து வந்தது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 11ம் தேதி தொடங்குகிறது.

2வது டெஸ்ட் டிசம்பர் 19ம் தேதி மொஹாலியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பு:

சென்னை வந்துள்ள இங்கிலாந்து அணிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விமான நிலையத்திலிருந்து தனி நுழைவாயில் வழியாக அவர்கள் வெளியே அழைத்து வரப்பட்டனர். பின்னர் அனைவரும் பலத்த பாதுகாப்புடன் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஹோட்டலுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை கமாண்டோ பாதுகாப்பு இங்கிலாந்து அணியினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Story first published: Wednesday, December 7, 2011, 18:09 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+