Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிக்ஸிங் கிடக்கட்டும் விடுங்க... இன்னிக்கு இன்னா ஸ்கோரு...??

டெல்லி: மேட்ச் பிக்ஸிங், ஸ்பாட் பிக்ஸிங், ஸ்ரீசாந்த் கேஸ் என்று நாடே அதிர்ந்து போய்க் கிடந்தாலும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்னும் பைத்தியம் விடவில்லையாம். ஐபிஎல் போட்டிகளுக்கு ஆதரவு சற்றும் குறையாமல் அமோகமாக இருக்கிறதாம்.

ஐபிஎல் போட்டிகளில் நடந்த ஸ்பாட் பிக்ஸிங்தான் நாட்டின் இப்போதைய தலைப்புச் செய்தி. ஆனால் ரசிகர்களுக்கு அது இரண்டாம் பட்சமாகவே இருக்கிறதாம்.

இன்னிக்கு யார் விளையாடுகிறார்கள், ஸ்கோர் என்ன, யாருக்கு பட்டம் கிடைக்கும், சென்னைக்கு சாம்பியன் பட்டம் கிடைக்குமா என்ற ரேஞ்சில்தான் ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.

கேமாவென்று கூடும் கூட்டம்

கேமாவென்று கூடும் கூட்டம்

பிக்ஸிங் பிரச்சினை மலை போல எழுந்து நின்றாலும் கூட, ஐபிஎல் போட்டிகளுக்கு கூட்டம் சற்றும் குறையவில்லையாம் . வழக்கத்தை விட கூடுதலாகவே கூட்டம் குவிந்து வருகிறதாம்.

டெல்லியில் குவிந்த பெரும் கூட்டம்

டெல்லியில் குவிந்த பெரும் கூட்டம்

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு வழக்கத்தை விட பெரும் கூட்டம் கூடியதாம்.

பார்த்து மகிழ்ந்த 33,00 பேர்

பார்த்து மகிழ்ந்த 33,00 பேர்

டெல்லி ஸ்டேடியத்தில் 45,000 பேர் உட்காரலாம். நேற்றைய போட்டியை 33,000 ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தனர் என்று டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகி ஒருவர் கூறினார்.

கிரிக்கெட் தான் முக்கியம் மச்சான்...

கிரிக்கெட் தான் முக்கியம் மச்சான்...

கிரிக்கெட் பார்க்க வந்த அகில் ஹார்ஷ் என்பவர் கூறுகையில், கிரிக்கெட்டை அனுபவிக்கவே நாங்கள் வந்துள்ளோம். எங்களுக்கு நல்ல ஆட்டத்தைப் பார்க்க வேண்டும் என்பதே முக்கியம். சர்ச்சைகள் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை என்றார்.

சென்னை- மும்பை போட்டிக்கும் செம கூட்டம்ப்பா

சென்னை- மும்பை போட்டிக்கும் செம கூட்டம்ப்பா

இதே மைதானத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் இடையிலான முதலாவது குவாலிபயர் போட்டிக்கும் கூட நல்ல கூட்டமாம்.

இறுதிப் போட்டிக்கும் எமக் கூட்டம் வரும்

இறுதிப் போட்டிக்கும் எமக் கூட்டம் வரும்

ஐபிஎல் இறுதிப் போட்டியையும் பெரும் திரளான ரசிகர்கள் கண்டு களிக்கக் காத்துள்ளனர் என்றே தெரிகிறது.

அது சரி எவன் வீட்டில் உலை பொங்கினால் என்ன, பொங்காவிட்டால் என்ன..நீ வலையைப் போட்டு மீன் பிடி கதைதான் போல.

Story first published: Thursday, May 23, 2013, 13:44 [IST]
Other articles published on May 23, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+