Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யூரோ கோப்பை கால்பந்து தொடரை பார்க்க விரும்பும் இந்திய கேப்டன் டோணி!

ராஞ்சி: கால்பந்து விரும்பியான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி, யூரோ கோப்பை 2012 கால்பந்து தொடரை விரும்பி பார்ப்பார் என்று அவரது நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி. கிரிக்கெட்டில் அசத்தும் டோணிக்கு, கால்பந்து போட்டிகளை பார்ப்பதில் மிகவும் விருப்பம் கொண்டவராம். குறிப்பாக யூரோ கோப்பை, உலக கோப்பை கால்பந்து போட்டிகளை பார்க்க தவறுவது இல்லையாம்.

கடந்த மாதம் ஐபிஎல் 5 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைமை வகித்து ஆடிய கேப்டன் டோணி, தற்போது போட்டிகள் எதுவும் இல்லாமல் ஓய்வில் உள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் காஷ்மீரில் உள்ள எல்லை பகுதிகளில் டோணி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்திய ராணுவத்தின் கெளவர லெப்டினன்ட் கர்னல் பதவியில் உள்ள டோணி, இந்திய எல்லைப் பகுதியில் உள்ள ராணுவ முகாம்கள், மக்களை சந்தித்து கலந்துரையாடினார். நேற்று தனது பயணத்தை முடித்து கொண்டு கேப்டன் டோணி, சொந்த ஊரான ராஞ்சிக்கு திரும்பினார்.

தற்போது ராஞ்சியில் உள்ள தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வரும் கேப்டன் டோணி, யூரோ கோப்பை 2012 கால்பந்து போட்டிகளை பார்ப்பார் என்று அவரது நண்பர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து டோணியின் நெருங்கிய நண்பரான சூரஜ் மோகன் என்பவர் கூறியதாவது

கால்பந்து விரும்பியான டோணி உலக கோப்பை, யூரோ கோப்பை போட்டிகளை பார்க்க அதிக ஆர்வம் கொண்டவர். ஆனால் யூரோ கோப்பை 2012 தொடரின் சில போட்டிகளை டோணி பார்க்க தவறுவார் என்று நினைக்கிறேன் என்றார்.

டோணியின் பள்ளி பருவத்தில் ஒரு பயிற்சியாளரால் சிறந்த விக்கெட் கீப்பிர் என்று புகழப்பட்டு, அவருக்கு ஒரு கால்பந்தும், ஒரு விக்கெட் கீப்பிங் கை உறை பரிசாக வழங்கப்பட்டதாம்.

கால்பந்து விரும்பியான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணிக்கு 'ஓ போடு'

Story first published: Saturday, June 9, 2012, 13:03 [IST]
Other articles published on Jun 9, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+