Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரபல கிரிக்கெட் வீரர், வர்ணனையாளர் டோனி க்ரெய்க் மரணம்!

Tony greig
லண்டன்: பிரபல கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான டோனி க்ரெய்க் இன்று சனிக்கிழமை மரணமடைந்தார். அவருக்கு வயது 66.

நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் டோனி க்ரெய்க்.

இங்கிலாந்து அணியின் கேப்டனாகவும் செயல்பட்டவர் டோனி. 58 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 22 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியவர் டோனி க்ரெய்க்.

தான் களத்தில் விளையாடிய காலத்தில் (1972-77) எதிரி அணிகளின் வீரர்களிடமும் நெருக்கமான நட்பு பாராட்டியவர் டோனி. அனைத்து நாட்டு அணிகளிலும் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் உண்டு.

மிகச் சிறந்த கிரிக்கெட் வர்ணனையாளராகத் திகழ்ந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் துபாயில் விளையாடியபோதுதான் அவருக்கு புற்று நோய் இருப்பது தெரிய வந்தது. ஆனால் நோய் முற்றிய நிலையில் இருந்தது.

"எனது உடல்நிலை மோசமாகிவிட்டது எனக்கே தெரிகிறது. மரணத்தோடு போட்டியிட முடியாது. மருத்துவர்கள் செய்வதைச் செய்யட்டும் என்றுவிட்டுவிட்டேன்," என ஒரு முறை கூறியிருந்தார்.

Story first published: Saturday, December 29, 2012, 17:50 [IST]
Other articles published on Dec 29, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+