ஜாவித் மியான்தத் இந்தியா வர விசா தடையில்லை: மத்திய அரசு

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஜனவரி 5ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண டெல்லி வரப்போவதாகவும் அதற்காக விசா பெற்றுள்ளதாகவும் ஜாவித் மியான்தத் தெரிவித்திருந்தார்.
மியான்தத் வருகைக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. சிவசேனா கட்சியினரும், காங்கிரஸ் தலைவர் ஜெகதாம்பாள் பால் உள்ளிட்டோரும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். தேடப்படும் தீவிரவாதியான தாவூத் இப்ராஹிமின் உறவினராகவும் உள்ள மியான்தத் இந்தியா வருவதற்கு விசா வழங்கக் கூடாது என்றும், இது இந்தியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் என்றும புதன்கிழமையன்று தெரிவித்தனர்.
இதனிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் என்ற தகுதியின் அடிப்படையில் மியான்தத் இந்தியா வர விசா வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா அரசால் தீவிரமாக தேடப்படும் குற்றவாளியான தாவூர் இப்ராஹிம் மகளைத்தான் தனது மகனுக்கு மணம் முடித்துள்ளார் ஜாவித் மியான்தத் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications