Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குருநாத் மெய்யப்பன் சஸ்பெண்ட்: பிசிசிஐ அறிவிப்பு

Gurunath meiyappan
மும்பை: ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட குருநாத் மெய்யப்பன் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட அவருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாக உறுப்பினர்களில் ஒருவரான குருநாத் மெய்யப்பன் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நிர்வாக உறுப்பினர் என்ற முறையில் அவர் ஐபிஎல் விதிகளுக்கும், ஊழலுக்கு எதிரான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைக்கும் உட்பட்டவராகிறார்.

இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒழுங்குமுறை குழு மற்றும் ஐபிஎல் நடத்தை குழுவின் விசாரணைகள் முடியும் வரை மெய்யப்பன் எந்தவிதமான கிரிக்கெட் நடவடிக்கைகள் மற்றும் சென்னை அணியுடன் எந்தவிதமான தொடர்பும் வைத்திருக்க தடை விதிக்கப்படுகிறது. கடந்த 23ம் தேதி மாலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மும்பை போலீஸ் அதிகாரிகளை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் சூதாட்டம் குறித்த விசாரணையில் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநாத் மெய்யப்பனின் மாமனார் சீனிவாசன் தான் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, May 26, 2013, 13:10 [IST]
Other articles published on May 26, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+