Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி டெஸ்ட் தரவரிசை-கம்பீர் முதலிடம்

Gambhir
துபாய்: சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர் கவுதம் கம்பீர் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசயை நேற்று ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் சங்கம்) துபாயில் அறிவித்தது. இதில் இந்திய துவக்க வீரர் கம்பீர் இரண்டு இடங்கள் முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

முதலிடத்தில் இருந்த இலங்கை கேப்டன் சங்ககரா இரண்டாவது இடத்துக்கும், இரண்டாவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய துணை கேப்டன் மைக்கலே கிளார்க் மூன்றாவது இடத்துக்கும் பின்தங்கியுள்ளனர்.

பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஹர்பஜன் சிங் 5வது, ஜாகிர் கான் 8வது இடம் பிடித்துள்ளனர்.

முதலிடத்தை இழந்தது ஆஸி...

அணிகளுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியா பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. முதலிடத்தில் இருந்த அந்த அணி ஆஷஸ் தொடர் தோல்வி காரணமாக மூன்று இடங்கள் சறுக்கி தற்போது நான்காவது இடத்தில் இருக்கிறது.

இந்தியாவுக்கு மூன்றாவது இடம்...

இதையடுத்து இரண்டாவது இடத்தில் இருந்த தென் ஆப்ரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியா நான்காவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:29 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+