ஒரு டெஸ்ட்டில் விளையாட கம்பீருக்கு தடை
டெல்லி: ஐசிசி நடத்தை விதியை மீறும் வகையில் நடந்து கொண்டதற்காக இந்திய வீரர் கெளதம் கம்பீருக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடந்து வரும் இந்தியா - ஆஸ்திரேலியான இடையிலான 3வது டெஸ்ட் போட்டியின்போது, ஆஸ்திரேலிய வீரர் ஷான் வாட்சனுக்கும், கெளதம் கம்பீருக்கும் இடையே மோதல் மூண்டது.
கம்பீர் ரன் எடுக்க ஓடியபோதெல்லாம் வாட்சன், அவருக்கு குறுக்கே நந்தி போல நின்று தடுத்ததால் கோபமடைந்தார் கம்பீர்.
இதனால் வாட்சனுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நடுவர் பில்லி பவுடன் குறுக்கிட்டு இருவரையும் அமைதிப்படுத்தினார்.
இந்த விவகார் குறித்து இரு வீரர்கள் மீதும் நடுவர்கள், போட்டி நடுவர் கிறிஸ் பிராடிடம் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து இந்த விவகாரத்தை நேற்று நடுவர் கிறிஸ் பிராட் விசாரித்தார்.
முதலில் வாட்சன் மீதான தண்டனை விவரம் வெளியிடப்பட்டது. அவருக்கு போட்டி கட்டணத்திலிருந்து 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.
கம்பீருக்கான தண்டனை இன்று அறிவி்க்கப்பட்டது. நடத்தை விதிகளை மீறியதற்காக கம்பீருக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications