கம்பீர்-லட்சுமண் இரட்டை சதம்: இந்தியா அபாரம்

டெல்லியில் நடந்து வரும் இந்தியா, ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியில் இந்தியா தொடர்ந்து ரன்களைக் குவித்து வருகிறது. நேற்று 3 விக்கெட் இழப்புக்கு 296 ரன்களை இந்தியா எடுத்தது. கம்பீர் அபாரமாக ஆடி சதமடித்தார்.
இன்று இந்தியா தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடியது.
தொடர்ந்து ரன்களைக் குவித்த கம்பீர் அபார இரட்டை சதத்தைப் போட்டு அசத்தினார். 380 பந்துகளைச் சந்தித்து 206 ரன்களைக் குவித்தார் கம்பீர். வாட்சன் பந்தில் அவர் ஆட்டமிழந்து வெளியேறினார்
மறு முனையில் கம்பீருடன் இணைந்து அசத்திய வி.வி.எஸ்.லட்சுமண் தன் பங்குக்கு ஒரு இரட்டை சதத்தைப் போட்டார்.
மிகச் சிறப்பாக விளையாடிய லட்சுமண், தனது பேட்டிங் பார்ம் குறித்து நிலவிய கருத்துக்களுக்கு இந்த இரட்டை சதம் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார்.
300 பந்துகளைச் சந்தித்த லட்சுமண் 200 ரன்களைச் சேர்த்தார். இதையடுத்து இந்தியா தனது இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவி்ததது. அப்போது இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 613 ரன்களை எடுத்திருந்தது.
முன்னதாக லட்சுமணனுடன் இணைந்து சிறப்பாக ஆடிய கேப்டன் கும்ப்ளே 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கங்குலி 5 ரன்களில் ஆட்டமிழந்தார். டோணி 27 ரன்களுடன் திரும்பினார். ஜாகிர்கான் 21 பந்துகளைச் சந்தித்து 28 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:14 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications