For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

''வாவ், வாட் ஏ ரிவர்ஸ் ஸ்வீப் கங்குலி...?''

Ganguly backtracks after blaming Dhoni
டெல்லி: வீரேந்திர ஷேவாக் அணியிலிருந்து நீக்கப்பட்டதற்கு டோணி மட்டுமே காரணம் என்று நான் கூறவில்லை என்று பல்டி அடித்துள்ளார் கங்குலி.

நேற்று அவர் அளித்த ஒரு பேட்டியில், கேப்டன் சொன்னால் அதை தேர்வாளர்கள் மறுக்க மாட்டார்கள். எனவே ஷேவாக் நீக்கத்தில் நிச்சயம் கேப்டன் டோணியின் கை இருக்கும் என்று உறுதியாக நம்புவதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது அதை மறுத்துப் பேசியுள்ளார் கங்குலி. அதில் தான் டோணியை குற்றம் சாட்டும் வகையில் பேசவில்லை என்று சொல்லியுள்ளார் கங்குலி.

இதுகுறித்து கங்குலி கூறுகையில், ஷேவாக்கின் நீக்கத்திற்கு டோணிதான் காரணம் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை.

வழக்கமாக அணித் தேர்வில் கேப்டன்களின் கருத்து கேட்கப்படுவது வழக்கம், அதுதான் நடைமுறை. எனவேதான் நான் அப்படிப் பேசினேன். இருப்பினும் ஷேவாக் நீக்கத்தில் டோணிக்கு தொடர்பு உள்ளதா, இல்லையா என்பதைச் சொல்வது கஷ்டம்.

வழக்கமாக வீரர்கள் சேர்ப்பு, நீக்கம் குறித்து கேப்டன்களிடம் தேர்வுக்குழு கேட்கும். நான் கேப்டனாக இருந்தபோதும் சரி, டிராவிட், டெண்டுல்கர், கும்ப்ளே, அஸாருதீன் என அனைவர் கேப்டனாக இருந்தபோதும் அப்படித்தான் நடந்தது. டோணியிடமும் கூட அப்படித்தான் கேட்பது வழக்கம். எனவேதான் நான் அப்படிக் கருத்து தெரிவித்தேன். மற்றபடி நான் டோணியைக் குற்றம் சாட்டி கருத்து தெரிவிக்கவில்லை.

இருப்பினும் கேப்டன் சொல்வதையெல்லாம் தேர்வுக் குழு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. கேப்டன்கள் சொல்வதையெல்லாம் தேர்வுக் குழு ஏற்கும் என்றும் சொல்ல முடியாது என்றார்.

Story first published: Monday, March 11, 2013, 12:40 [IST]
Other articles published on Mar 11, 2013
English summary
Former Indian captain Sourav Ganguly on Sunday (March 10) sought to clarify his statement on Virender Sehwag's ouster from the Test squad, saying he had never categorically stated that MS Dhoni had a hand in his the openers omission. A media report yesterday had quoted Ganguly as saying that, Dhoni had a hand in his the players removal from the team and it also stated that if Sachin Tendulkar and Dhoni are being "persisted" despite poor run of form, then why not with Sehwag.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+