ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்-அணியி்ல் மீண்டும் கங்குலி!

அதே போல தமிழக பேட்ஸ்மேன் பத்ரிநாத்துக்கும் அணியில் இடம் தரப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வரும் 9ம் தேதி பெங்களூரில் துவங்குகிறது.
இந் நிலையில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேசிய தேர்வுக் குழு முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை இன்று தேர்வு செய்தது.
15 பேர் கொண்ட இந்த அணியில் கங்குலிக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அதே போல தமிழக பேட்ஸ்மேன் பத்ரிநாத், டெல்லியைச் சேர்ந்த ஸ்பின்னர் அமித் மிஸ்ரா ஆகிய புதுமுகங்களும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இராணி கோப்பையில் புறக்கணிக்கப்பட்டதால் கங்குலி அணியில் தேர்வு செய்யப்படுவாரா என்ற சந்தேகம் இருந்தது. இந் நிலையில் இடம் தரப்பட்டுள்ளது.
தனது கிரிக்கெட் வாழ்விலிருந்து கெளரவமாக விலகிக் கொள்ளும் வகையில் கங்குலிகுக் இந்த வாய்ப்பு தரப்பட்டுள்ளதாகவும் பேசப்படுகிறது.
இந்திய அணி விவரம்: அனில் கும்ப்ளே, வீரேந்திர ஷேவாக், கௌதம் காம்பீர், ராகுல் திராவிட், சச்சின் டெண்டுல்கர், கங்குலி, லஷ்மண், டோனி, ஹர்பஜன்சிங், ஜகீர்கான், இஷாந்த் சர்மா, முனாப் படேல், ஆர்.பி. சிங், பத்ரிநாத், அமீத் மிஸ்ரா
Story first published: Wednesday, December 7, 2011, 17:15 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications