For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிரிக்கெட்-ஓய்வு பெறுகிறார் ஆடம் கில்கிறிஸ்ட்

By Staff
Adam Gilchrist

அடிலைட்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆடம் கில்கிறிஸ்ட் (36) கடந்த 1999ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்குள் நுழைந்தார். அணியின் விக்கெட் கீப்பரான கில்கிறிஸ்ட், மிகச் சிறந்த அதிரடி ஆட்டக்காரர்.

இதுவரை அவர் 96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5,556 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியாவின் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் 7வது இடத்தில் உள்ளார். அதிகபட்சமாக 204 ரன்கள் அடித்துள்ளார். இவருடைய சராசரி 47.89 ஆகும். டெஸ்ட் போட்டிகளில் 17 சதங்கள் அடித்துள்ளார்.

கடந்த 1996ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் நுழைந்து இதுவரை 277 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9,297 ரன்களை குவித்துள்ளார். இவருடைய சராசரி 36.03 ஆகும்.

ஒருநாள் போட்டிகளில் 15 சதங்களை அடித்துள்ள கில்கிறிஸ்ட் அடித்துள்ள அதிகபட்ச ரன்கள் 172.

5 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். கில்கிறிஸ்ட் கேப்டனாக இருந்தபோது ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டி டிராவிலும், ஒரு போட்டியில் தோல்வியும் பெற்றது.

கீப்பிங்கில் உலக சாதனை:

டெஸ்ட் போட்டிகளில் அதிகம் பேரை அவுட்டாக்கி உலக சாதனை படைத்துள்ளார். இதுவரை தென்ஆப்பிரிக்காவின் மார்க் பவுச்சர் 109 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 413 பேரை அவுட்டாக்கியிருந்தார்.

ஆனால் தற்போது அடிலைடில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டத்தில் இந்திய கேப்டன் கும்ளேயை கேட்ச் பிடித்து அவுட்டாக்கியதன் மூலம் 414 பேரை அவுட்டாக்கி மார்க் பவுச்சரின் சாதனையை முறியடித்து உலக சாதனை படைத்துள்ளார்.

கில்கிறிஸ்ட் 96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 414 பேரை அவுட்டாக்கியுள்ளார். இதில் 377 பேரை கேட்ச் பிடித்தும், 37 பேரை ஸ்டம்பிங் செய்தும் அவுட்டாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனை சாதனைகளுக்கு சொந்தக்காரரான கில்கிறிஸ்ட் தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடனும், அடுத்து நடைபெறவுள்ள இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா பங்குபெறும் முத்தரப்பு ஒருநாள் போட்டியுடனும் ஓய்வு பெற இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தனது ஓய்வு குறித்து கில்கிறிஸ்ட் கூறியதாவது,

மிகச்சிறப்பாக தருணத்தில் நான் ஓய்வு பெறுவது எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. தொடர்ந்து விளையாட எனது வயது ஒத்துழைக்கவில்லை.

இதனால் நான் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். ஓய்வுக்கு பின்னர் முழுக்க முழுக்க எனது குடும்பத்தாருடன் நேரத்தை செலவிட முடிவு செய்துள்ளேன் என்றார்.

கில்கிறிஸ்ட்டின் ஓய்வு ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய இழப்பே.
Story first published: Wednesday, December 7, 2011, 18:11 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+