
ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடும் ஒவ்வொரு டீமுக்கும் ஒவ்வொரு தீம் பாடல் இருக்கிறது. 9 அணிகளும் தங்களின் தீம் பாடலை வைத்துதான் விளம்பரம் தேடும். ரசிகர்களை கவரும்.
சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு செம விசில் அடிங்க என்பதுதான் தமிழ்நாட்டில் பிடித்த தீம் பாடலாக இருந்தது.
இப்போது ஐதராபாத் அணியை சன் குரூப் வாங்கியுள்ளதை அடுத்து தமிழ்நாட்டு ரசிகர்களை கவரும் வகையிலும் அதே சமயம் தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ற வகையிலும் தீம் பாடலை தயாரித்துள்ளனர்.
நண்பா எழு லெட்ஸ் ரைஸ் அப்...
வானம் தொடு சன் ரைசர்ஸ்...
உன்னை வெல்ல உலகத்தில் யாரு மில்லை...
உன்னுடைய முயற்சிக்கு எல்லை இல்லை...
என்ற அணியை உற்சாகமூட்டும் வகையில் தமிழில் வரிகளை எழுதியுள்ளார் நா. முத்துக்குமார்.
தமிழ் மட்டுமல்லாது, கன்னடம், தெலுங்கு, மலையாளம் என திராவிட மொழிகளில் சன் ரைசர்ஸ் தீம் பாடல் தயாராகியுள்ளது. இந்த பாடலுக்கு இசை அமைத்துள்ளார் பிரபல இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். அபய், ரீட்டா தியாகராஜன், ஹேமச்சந்திரா, ஷாலினி ஷிங், சைத்ரா, ராகுல் நம்பியார்,மேகா, போன்ற பிரபல பாடகர்கள் பாடியுள்ள இந்த தீம் பாடல் கடந்த ஒரு வாரகாலமாக சன் குழுமத்தின் அனைத்து சேனல்களிலும் ஒளிபரப்பாகிவருகிறது. யுடுயூப்பில் அப்லோட் செய்யப்பட்டுள்ள இந்த பாடல் நிறைய லைக்குகளை அள்ளியுள்ளது.