இப்போ பக்குவமாயிட்டேன்... மற்றவர்களுடன் ஆக்ரோஷமா சண்டை போடமாட்டேன்: ஹர்ஜபன்சிங்

சென்னையில் இன்று காலை அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நான் நாளை 100 -வது டெஸ்டில் ஆடும் தகவல் இன்று காலையில்தான் தெரிவிக்கப்பட்டது. அதுகுறித்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவுக்காக ஆடவேண்டும் என்ற ஒரே இலக்கோடு பயிற்சி செய்தேன். முதல் டெஸ்டில் இருந்த அதே மனநிலையுடன் 100-வது டெஸ்டிலும் இருக்கிறேன்.
விளையாட்டு வீரர்கள் எப்போதும் உச்சத்திலோ, தாழ்ந்த நிலையிலோ இருப்பதில்லை. நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், வெளிப்படுத்தாத போதும் மனம் தளரவில்லை இல்லை. விளையாட்டில் ஏற்ற இறக்கம் ஏற்படுவது சகஜம்தான். கடந்த காலத்தில் ஆவேசத்தில் சில தவறுகளை செய்திருக்கிறேன். அதற்காக வருத்தப்படுகிறேன். இப்பொழுது பக்குவப்பட்டுவிட்டேன்.. கங்குலி, கும்ப்ளே போன்ற சிறந்த வீரர்களுடன் விளையாடியதை பெருமையாக கருதுகிறேன்.
சிறப்பாக விளையாடினால் இந்திய மண்ணில் 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெறமுடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். .


Click it and Unblock the Notifications