Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பந்தைக் கீழே போட்டு விட்டு படம் எடுக்கப் போகிறார் ஹர்பஜன் சிங்!

சண்டிகர்: இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வரும் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் திரைப்படத் தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கிறாராம்.

பஞ்சாபி மொழிப்படங்களை எடுக்க அவர் ஆர்வமாக இருக்கிறாராம்.இதை அவரே அவரது வாயால் தெரிவித்துள்ளார்.

படம் எடுப்பதால் ஆத்ம திருப்தி கிடைக்கிறதோ இல்லையோ, நன்கு சம்பாதிக்க முடியும் என்பது ஹர்பஜனின் கருத்தாக உள்ளது.

இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறியதை கேளுங்கள்...

சைட் பிசினஸ் அவசியம் பாஸ்

சைட் பிசினஸ் அவசியம் பாஸ்

ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் சைடில் ஏதாவது ஒரு தொழில் வைத்துள்ளனர். விளையாட்டைத் தவிர நல்லதொரு பிசினஸும் அவசியம்தான்.

சினிமா நல்ல தொழில்

சினிமா நல்ல தொழில்

சினிமா ஒரு நல்ல தொழில். படம் எடுப்பது ஆத்ம திருப்தி தரும். அதை விட முக்கியமாக நிறைய சம்பாதிக்கலாம்.

பஞ்சாபி மொழிதான் நமக்குச் சரி

பஞ்சாபி மொழிதான் நமக்குச் சரி

பஞ்சாபி சினிமா தற்போது ஆரோக்கியமாக உள்ளது. நமக்கும் அதுதான் சரிப்பட்டு வரும். எனவே பஞ்சாபி மொழியில் படம் தயாரிக்க ஆர்வமாக உள்ளேன். கவர்ச்சிகரமான தொழிலாகவும் இது எனக்குத் தெரிகிறது.

முதலில் 2 படம்

முதலில் 2 படம்

முதலில் 2 படங்கள் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளேன். இருப்பினும் கிரிக்கெட்டை முழுமையாக விட்டு விட மாட்டேன்.

பாலிவுட்டிலும் பேசுகிறேன்

பாலிவுட்டிலும் பேசுகிறேன்

அதேபோல பாலிவுட்டிலும் சில நடிகர்களுடன் பேசிவருகிறேன். 2 படங்களுக்கான இயக்குநர்களை முடிவு செய்து விட்டேன். விரைவில் படத் தயாரிப்பு குறித்த விவரம் வெளியிடுவேன்.

செம காமெடியாக இருக்கும்

செம காமெடியாக இருக்கும்

இரு படங்களும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும். ரசிகர்கள் இதை ரசிப்பார்கள். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இப்படங்கள் திரையிடப்படும்.

சேச்சே நான் நடிக்க மாட்டேன்

சேச்சே நான் நடிக்க மாட்டேன்

படத் தயாரிப்போடு சரி, நான் நடிக்க மாட்டேன். கண்டிப்பாகஇதை நம்பலாம். எனது படத்தில் நானே நடித்தால் எப்படி...

பஞ்ச்வுட்டில் 2வது கிரிக்கெட் வீரர்

பஞ்ச்வுட்டில் 2வது கிரிக்கெட் வீரர்

ஏற்கனவே யுவராஜ் சிங்கிந் தந்தை யோகிராஜ் சிங், பஞ்சாபி திரைத்துறையில் இருக்கிறார். அவர் 36 படங்களை அங்கு தயாரித்துள்ளார். பஞ்ச்வுட் என்று பஞ்சாபி திரைத்துறை செல்லமாக அழைக்கப்படுகிறது.

99 டெஸ்ட்...

99 டெஸ்ட்...

ஹர்பஜன் சிங் இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். 229 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ளார். தற்போது சினிமாவில் புகுகிறார்...

Story first published: Wednesday, January 30, 2013, 11:29 [IST]
Other articles published on Jan 30, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+