'விஷக் களை' பேச்சு தவறுதான்: - ஹெய்டன்
மெல்போர்ன்: இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கை விஷக் களைச் செடி என வர்ணித்து கருத்து தெரிவித்தது தவறான பேச்சுதான். ஆனால் யாரையும் புண்படுத்தும் எண்ணத்திலோ அல்லது கிரிக்கெட்டுக்கு அவமரியாதை தேடும் வகையிலோ அப்படி நான் கூறவில்லை என்று ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் மாத்யூ ஹெய்டன் கூறியுள்ளார்.
இதுகுறித்து டெய்லி டெலிகிராப் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், எனது கருத்துக்கள் அறிவுப்பூர்வமானது இல்லை என்பதை நான் உணர்கிறேன். அது தவறுதான். ஆனால் யாருடைய மதிப்பையும் கெடுக்கும் வகையில், கிரிக்கெட்டுக்கு அவமரியாதை தேடும் வகையில் அப்படி நான் பேசவில்லை.
நான் வளர்ந்த கிரிக்கெட் சூழலுக்கும், இன்றுள்ள சூழலுக்கும் நிறைய வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. அதைக் குறிப்பிடும் வகையில்தான் அப்படிக் கூறினேன்.
எனது நடத்தை குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கண்டித்துள்ளது எனக்கு பெரும் சோகத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார் ஹெய்டன்.


Click it and Unblock the Notifications