Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெண்டுல்கரிடம் ஆட்டோகிராப் வாங்கிய 'சச்சின்'!

கிறிஸ்ட்சர்ச்: கிறிஸ்ட்சர்ச் நகரில் டெண்டுல்கர் 163 ரன்கள் எடுத்து விளாச, போட்டியை பார்க்க வந்த சச்சின் ஆஸ்டின் என்ற அவரது ரசிகர் உணவு இடைவேளையின் போது டெண்டுல்கரிடம் ஆட்டோகிராப் வாங்கி மகிழ்ந்தார்.

நேற்று கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்த மூன்றாவது ஒரு நாள் போட்டியில் டெண்டுல்கர் சூப்பராக பேட் செய்து சதம் கடந்தார். இந்திய பேட்டிங் முடிந்தவுடன் உணவு இடைவேளையின் போது டெண்டுல்கர் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டு கொடுத்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த நியூசிலாந்து சிறுவன் ஒருவன் டெண்டுல்கரிடம் வந்து, ஹாய் டெண்டுல்கர்... ஐ ஆம் சச்சின் எனக் கூற அவர் ஆச்சர்யத்தில் வியந்து போனார். அந்த சிறுவனுக்கு ஆட்டோகிராப் போட்டு கொடுத்து சில நிமிடங்கள் அவனுடன் பேசினார். அவனுடைய தலைமுடியை கோதிவிட்டு, ஆல் த பெஸ்ட் சொன்னார்.

அவனுக்கு அனைத்து இந்திய வீரர்களும் ஆட்டோகிராப் போட்டு கொடுத்தனர். அப்போது கேமராக்களும் சிறுவனை நோக்கி திரும்பியதில் மிரண்டு போனான்.

அந்த சிறுவன் குடும்பத்தினருக்கு இந்தியாவுடன் எந்த தொடர்பும் இல்லையென்றாலும், கிரிக்கெட் மீதுள்ள மோகத்தால் அவனது பெற்றோர்கள் அவனுக்கு சச்சின் ஆஸ்டின் என பெயரிட்டுள்ளனர்.

இது குறித்து அந்த சிறுவனின் தந்தை நிக் அன்கால்ட் கூறுகையில், டெண்டுல்கரின் ஆட்டம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் அவர் பெயரையே வைத்துவிட்டேன். டெண்டுல்கர் மிகப்பெரிய பேட்ஸ்மேனாக வருவார் என சிறு வயதிலே எதிர்பார்த்தேன். என் மகன் சச்சின் இப்போது தான் முதன் முறையாக சர்வதேச போட்டியை காண வந்தான்.

அவன் தனது பெயரில் உள்ள உலகின் மிகப்பெரிய பேட்ஸ்மேனை நேரில் பார்த்ததும் மட்டுமல்லாமல். அவரது சூப்பர் ஆட்டத்தை பார்த்துவிட்டான் என்றார் அன்கால்ட்.

மூன்றாம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவன் கூறுகையில், டெண்டுல்கரிடம் ஆட்டோகிராப் வாங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் பெயரை எனக்கு வைத்திருப்பது பெருமை அளிக்கிறது. வளர்ந்தவுடன் நானும் பெரிய கிரிக்கெட் வீரர் ஆவேன் என்றான்.

Story first published: Wednesday, December 7, 2011, 18:24 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+