Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன நடந்தா எங்களுக்கு என்ன? ஹைதராபாத்தில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்போம்: ஆஸி. அறிவிப்பு

Hyderabad Test expected to go ahead
சென்னை: ஹைதராபாத்தில் இரட்டை குண்டுவெடிப்பு நிகழ்ந்திருக்கும் நிலையில் 'எங்களுக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையே இல்லை.. திட்டமிட்டபடி அதே ஹைதராபாத்தில்தான் 2-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்போம் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி அறிவித்திருக்கிறது.

சென்னையில் ஆஸ்திரேலியா அணியின் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் சுதர்லாந்த் கூறுகையில், ஹைதராபாத் பற்றிய நிலவரங்களை நாங்கள் ஆராய்ந்திருக்கிறோம். அதற்காக அங்கு போவோமோ இல்லையா என்று சந்தேகப்பட வேண்டாம்.

குண்டுவெடிப்பு சம்பவம் கவலை அளிக்கிறது. அதே நேரத்தில் நாங்கள் இப்போது சென்னை போட்டிக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். எங்கள் அணி வீரர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தி அளிக்கிறது. எங்களைப் பொறுத்தவரையில் என்ன நடந்தாலும் திட்டமிட்டபடி ஹைதராபாத்தில் மார்ச் 2-ந் தேதி 2-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்போம் என்றார் அவர்.

Story first published: Friday, February 22, 2013, 11:24 [IST]
Other articles published on Feb 22, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+