உச்சா போனதுக்கெல்லாம் எப்படி தண்டனை கொடுக்க முடியும்... 'கருத்து' கங்குலி!
கொல்கத்தா: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் பிட்ச்சில் சிறுநீர் கழித்த விவகாரத்தைப் படித்து விட்டு சிரித்தேன். ஆனால் இதற்கெல்லாம் எப்படி தண்டன தர முடியும் என்று கூறியுள்ளார் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரை வென்ற உற்சாகத்தில் லண்டன் ஓவல் மைதானத்தில் கூடி நடு ராத்தியில் கும்மாளம் போட்டனர் இங்கிலாந்து வீரர்கள்.
பீர் குடித்து குஷியாக காணப்பட்ட அவர்களில் சிலர் பிட்ச் மேலேயே சிறுநீர் கழித்தும் அசிங்கப்படுத்தினர். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் குறித்து கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

சிரிப்புதான் வருது...
அதை நினைச்சா சிரிப்புதான் வருகிறது. நானும் செய்தி பார்த்து விட்டு சிரித்தேன். உற்சாகம் ஓவராகி விட்டதாக கருதுகிறேன். இப்படிப்பட்ட அதீதமான கொண்டாட்டம் தேவையில்லை.

இதுக்கு எப்படி தண்டனை கொடுப்பீங்க
ஆனால் இதற்காக தண்டனையெல்லாம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே எனது கருத்து. எச்சரித்தோ அல்லது அபராதம் விதித்தோ விட்டு விட வேண்டியதுதான். வேறு என்ன செய்ய முடியும்...

ஸ்கூல் பிள்ளைக இல்லையே..
அவர்கள் முதிர்ச்சியானவர்கள் பள்ளிப் பிள்ளைகள் கிடையாது. எனவே இதற்கு தண்டனை தேவை என்று நான் கருதவில்லை. ஏதோ ஜாலியில் சில்மிஷமாக நடந்து கொண்டு விட்டனர்.

நான் கூட சட்டையைக் கழற்றினேனே...
நான் கூட லார்ட்ஸ் மைதானத்தில் ஒருமுறை சட்டையைக் கழற்றி வெற்றியைக் கொண்டாடினேன். அப்போது எல்லாமே கட்டுக்குள்தான் இருந்தது. அதேபோல தென் ஆப்பிரிக்க அணியை, தென் ஆப்பிரிக்காவில் வீழ்த்தியபோதும் டிரஸ்ஸிங் ரூமில் எங்களது வீரர்கள் அதகளப்படுத்தினர். ஆனால் உள்ளேதான் அது நடந்தது.

நாங்களும்தான் தண்ணியடிச்சோம்
நமது வீரர்களில் சிலர் மது அருந்தினர். சிலர் பெப்சி மட்டும் குடித்தனர். சிலர் குடிக்கவே இல்லை. கொண்டாட்டம், உற்சாகம், ஜாலி இருந்தது. ஆனால் தப்பாக எதுவும் நடக்கவில்லை. காரணம், அப்போது கேப்டனாக இருந்தவர் டிராவிட்.
அளவோடு இருந்தால் பிரச்சினை வராது என்று கூறியுள்ளார் கங்குலி.


Click it and Unblock the Notifications