Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓய்வு பற்றிய பேச்சுக்களை நான் கண்டுகொள்வதில்லை: சச்சின்

Sachin Tendulkar
டெல்லி: ஓய்வு குறித்த பேச்சுக்களை நான் பொருட்படுத்துவது இல்லை. எனது வேலையை நான் பார்க்கிறேன். அதேபோல மற்றவர்களும் அவரவர் வேலையைப் பார்த்தால் நல்லது என்று கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நான் தினசரி செய்தித்தாள் படிப்பேனா என்று கேட்கிறார்கள். நாங்கள் டெய்லி செய்தித்தாள் படித்தால், பிறகு யார் கிரிக்கெட் விளையாடுவது. எனது பெயரில் டுவிட்டரில் போலியான கணக்குகள் இருந்தன. இதனால் தான் சர்ச்சைகளைத் தவிர்க்க நானே டுவிட்டரில் கணக்கு துவங்கிவிட்டேன். டுவிட்டர் மூலம் பல நல்லதையும் செய்ய முடிகிறது.

எனது ஆட்டத் திறன் குறித்து பலரும் பேசுகிறார்கள். ஆனால் எல்லோருமே ஏன் நெகட்டிவாகவே பார்க்கிறார்கள் என்று தான் தெரியவில்லை. ஒவ்வொருவரும் ஒன்று சொல்வார்கள்.

எனது குடும்பத்தினர் என்னுடன் கிரிக்கெட் குறித்துப் பேசுவதில்லை. நான் எனது சகோதரருடன் மட்டுமே கிரிக்கெட் பற்றிப் பேசுவேன். கருத்துக்கள் குறித்து நான் கவலைப்படுவதில்லை.

2005ம் ஆண்டு முதலே எனது ஓய்வு குறித்து பேச ஆரம்பித்து விட்டனர். இன்னும் பேசி வருகின்றனர். நான் அதைப் பொருட்படுத்துவதில்லை. எனது வேலையை நான் சீரியஸாக பார்த்து வருகிறேன். அதேபோல மற்றவர்களும் அவரவர் வேலையைப் பார்த்தால் போதும் என கருதுகிறேன் என்றார் சச்சின்.

Story first published: Friday, April 19, 2013, 12:23 [IST]
Other articles published on Apr 19, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+