திருப்பி அடிப்பேன், சீக்கிரமே.. சொல்கிறார் ஹர்பஜன்
சண்டிகர்: மீ்ண்டும் இந்திய அணியில் இடம் பெற கடுமையாக உழைக்கப் போகிறேன் என்று கூறியுள்ளார் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்.
அஸ்வின் வருகைக்குப் பின்னர் ஹர்பஜன் சிங்கின் சுழற்பந்துக் காலம் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது.
தொடர்ந்து இந்திய அணியில் அவர் சேர்க்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஹ்ரபஜன் சிங்.

அடுத்த 5 மாதத்திற்கு கடும் உழைப்பு
அடுத்த 5 மாதங்களில் நான் கடுமையாக உழைக்கப் போகிறேன். எனது பார்மைத் திரும்பப் பெற தீவிரமாக பயிற்சி செய்யப் போகிறேன்.

மீண்டும் வருவேன்.. அதிரடியாக
மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவேன். அதே பழைய ஹர்பஜன் சிங்காக, அதிரடியாக நுழைவேன்.

திருப்பி அடிப்பேன்
என் மீதான விமர்சனங்களை திருப்பி அடிக்கும் வகையில் எனது மறு விஜயம் இருக்கும் என்றார் ஹர்பஜன் சிங்.
Story first published: Thursday, July 18, 2013, 17:01 [IST]
Other articles published on Jul 18, 2013


Click it and Unblock the Notifications