பேட்டிங் ஆர்டரில் முன்வரிசையில ஆடத்தான் விரும்புகிறேன்: இர்ஃபான் பதான்

குஜராத்தின் பரோடாவை சேர்ந்த இர்ஃபாத்ன் பதான் ஐபிஎல் ஆட்டம் பற்றி கூறுகையில், பேட்டிங்கில் முன்வரிசை ஆர்டரில் ஆடும்போதுதான் என்னுடைய முழுத்திறமையையும் நான் வெளிப்படுத்த முடியும். சில சமயங்களில் பின்வரிசையில் ஆடும்போது அடித்து ஆடுவதற்கு போதுமான பந்துகள் கிடைப்பதில்லை.
முன்வரிசையில் எப்படி நிலைத்து நின்று ஆடுவது என்பதற்கான டெக்னிக் என்னிடம் இருக்கிறது..நான் சார்ந்திருக்கும் அணிக்கு கூடுதலான பலனைத் தரவே விரும்புகிறேன். பந்துவீச்சிலும் கூட விக்கெட்டுகளைக் கைப்பற்றுவது என்பது ஒரு விஷயம் அல்ல.. அளவான ரன் கொடுத்து விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு என்னால் முடியும்.
நடப்பு ஐபிஎல் 6வது தொடரில் பொதுவாக ஸ்கோர் எண்ணிக்கை அதிகமாக இல்லாமல் இருப்பதற்கு காரணம் மைதானங்கள் ஒரு காரணமாக இருக்கலாம் என கருதுகிறேன் என்றார் அவர்.
Story first published: Friday, April 26, 2013, 13:57 [IST]
Other articles published on Apr 26, 2013


Click it and Unblock the Notifications