Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐ.சி.சி சாம்பியன்ஸ் கிரிக்கெட்: ஹர்பஜன், சேவாக் அவுட்... ஷிகார் தவான் இன்

ICC Champions Trophy 2013: India omit Harbhajan, Sehwag
டெல்லி: ஐ.சி.சி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இந்திய அணியிலிருந்து மூத்த வீரர்கள் வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங், ஜாகீர்கான் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைப்பெறவுள்ள ஐசிசி சாம்பியன் கோப்பை ஆட்டத்துக்கான வீரர்கள் தேர்வு நடைப்பெற்று வந்தது. இன்று அதன் முடிவுகள் வெளியிடப்பட்டன. சந்தீப் பட்டீலை முதன்மையாக கொண்டு செயல்பட்ட கிரிக்கெட் தேர்வு குழு கமிட்டி வீரர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் விரேந்தர் சேவாக் இடம்பெறவில்லை. அதேபோல் சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜனும், வேகபந்து வீச்சாளர் ஜாகீர் கானும் தேர்வு குழுவால் நீக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பதிலாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடிய ஷிகார் தவான், 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் கேப்டன் உன்முக்த் சந்த், காஷ்மீர் ஆல்ரவுண்டர் பர்வேஸ் ரசூல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்களின் விவரம்:

முரளி விஜய், ஷிகார் தவான், கவுதம் காம்பீர், உன்முக்த் சந்த், விராட் ஹோக்லி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, மனோஜ் திவாரி, அஜின்கியா ரஹேனே, அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ், மகிந்திரசிங் டோணி, ரித்திமன் சஹா, தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின், அமித் மிஸ்ரா, ரவீந்திரா ஜடேஜா, ஜலாஜ் சக்சேனா, பர்வேஸ் ரசூல், இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார், அசோக், டிண்டா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, இர்பான் பதன், ஆர். வினய்குமார், பிரவீன்குமார், ஈஸ்வர் பாண்டே, சித்தார்த் கவுல் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

Story first published: Saturday, April 6, 2013, 16:02 [IST]
Other articles published on Apr 6, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+