ஐசிசியின் தவறால் ஹர்பஜன் தப்பியுள்ளார்: மால்கம் ஸ்பீட்

அடிலைட்: மனிதத் தவறுகள் மற்றும் டேட்டாபேஸ் தவறுகளால் ஹர்பஜன் சிங் தண்டனையிலிருந்து தப்பியுள்ளார் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மால்கம் ஸ்பீட் கூறியுள்ளார்.
ஹர்பஜன் சிங் மீதான இனவெறிக் குற்றச்சாட்டை ஐசிசியின் மேல் முறையீட்டு ஆணையர் நீதிபதி ஜான் ஹன்சன் நிராகரித்து விட்டார். சைமண்ட்ஸ் திட்டியதால் பதிலுக்கு ஹர்பஜனும் திட்டியுள்ளார். ஆனால் அவர் திட்டியது இந்தி கெட்டவார்த்தை. அதை சைமண்ட்ஸ் தவறுதலாக அர்த்தம் பண்ணிக் கொண்டுள்ளார் என்று தனது தீர்ப்பில் ஹன்சன் கூறியுள்ளார்.
இந்த தீர்ப்பு குறித்து ஆஸ்திரேலிய வீரர்களும், மீடியாக்களும் பெரும் வருத்தம் தெரிவித்துள்ளன. பணம் பேசி விட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் ஐசிசியின் தலைவர் மால்கம் ஸ்பீடும் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மனிதத் தவறுகளால்தான் நீதிபதி ஹன்சனுக்கு ஹர்பஜன் சிங்கின் முந்தைய நடத்தை விதிமீறல் சம்பவங்கள் குறித்து தெரியாமல் போய் விட்டது. இந்தத் தவறுக்கு ஐசிசி பொறுப்பேற்றுக் கொள்கிறது.
ஹர்பஜன் சிங் குறித்த முந்தைய வரலாறு எங்களிடம் இல்லாததே அவர் தண்டனையிலிருந்து தப்பக் காரணம் என்று கூறியுள்ளார் ஸ்பீட்.
ஹர்பஜன் சிங் எப்படியாவது தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூற வருகிறாரா ஸ்பீட்?
இந்திய வீரர்களுக்கு டோணி அட்வைஸ்
இதற்கிடையே, இந்திய வீரர்கள், நடத்தை விதிமுறைகளை புரிந்து அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும் என்று இந்திய வீரர்களுக்கு கேப்டன் டோணி அட்வைஸ் செய்துள்ளார்.
20-20 போட்டி என்பது பரபரப்பான, விறுப்பான ஒரு ஆட்டம். இதில் வாயை மூடிக் கொண்டு அமைதியாக விளையாட முடியாது. இருப்பினும், நடத்தை விதிகளை மீறும் வகையில் வீரர்கள் நடந்து கொள்ளாமல் கவனமாக இருக்க வேண்டும் என்றார் டோணி.
Story first published: Wednesday, December 7, 2011, 18:10 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications