Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி தரவரிசை-டாப் 10ல் ஷேவாக்

துபாய்: கிரிக்கெட் வீரர்களுக்கான ஐசிசி தரவரிசையில் ஷேவாக் சுமார் 6 ஆண்டுகளுக்கு பின்னர் டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்துள்ளார்.

இந்தியா, நியூசிலாந்து ஒரு நாள் தொடர் முடிந்தநிலையில் ஐசிசி புதிய தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் நியூசிலாந்தில் அதிரடியாக ரன்கள் சேர்த்த ஷேவாக் 9 இடங்கள் முன்னேறி 6வது இடத்தை பிடித்துள்ளார். சுமார் 6 ஆண்டுக்குள் பின்னர் அவர் மீண்டும் டாப் 10 பட்டியலுக்குள் வந்துள்ளார். மூன்றாவது போட்டியில் 163 ரன்கள் எடுத்த சச்சின் 8 இடங்கள் முன்னேற்றம் கண்டு 13வது இடம்பெற்றுள்ளார்.

கேப்டன் டோணி தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் இருந்த யுவராஜ் ஒரு இடம் பின்தங்கி 4வது இடத்தை பிடித்துள்ளார். கம்பீர் 16வது இடத்தில் இருக்கிறார்.

பவுலர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருந்த வெட்டோரி, இந்தியாவுடன் சரியாக விளையாடததை அடுத்து 5வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். முதல் இடத்தை இலங்கையின் நுவன் குலசேகரா பிடித்துள்ளார்.

அணிகளுக்கான தரவரிசையி்ல் இந்தியா 122 புள்ளிகளுடன் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது. முதலிரண்டு இடங்களில் ஆஸ்திரேலியாவும், தென் ஆப்ரிக்காவும் உள்ளன.

Story first published: Wednesday, December 7, 2011, 18:24 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+