சர்வதேச தர வரிசைப் பட்டியலில் புஜாராவுக்கு 6வது இடம், 10வது இடத்தில் ஓஜா!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று டெஸ்ட் போட்டி வீரர்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இதில் 7வது இடத்தில் இருந்த இந்திய வீரர் புஜாரா ஒரு இடம் முன்னேறி 6வது இடத்தைப் பிடித்தார். 11வது இடத்தில் இருந்த மற்றொரு இந்திய வீரரான ஓஜா வெற்றிகரமாக 10வது இடத்துக்கு முன்னேறினார். 7வது இடத்தில் இருந்த அஸ்வின் 8வது இடத்துக்கு நகர்ந்தார்.
தென்னாப்பிரிக்காவின் ஹசிம் முதலிடத்திலும் மேற்கிந்திய தீவுகளின் சந்தர்பால் 2வது இடத்திலும் 3வது இடத்திலும் இருக்கின்றனர்.
ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் அதிரடி காட்டிய இங்கிலாந்தின் வீரர்கள் பலரும் ரேட்டிங்கில் ஏறுமுகம் கண்டுள்ளனர். இங்கிலாந்தின் பெல் 11வது இடத்திலும் 26வது இடத்தில் இருந்த ரூட் 21வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.
Story first published: Monday, July 22, 2013, 15:52 [IST]
Other articles published on Jul 22, 2013


Click it and Unblock the Notifications