Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாம தான் நம்பர் 1, நாம தான் நம்பர் 1!

ICC Rankings: Team India retain No 1 spot in ODIs
துபாய்: ஒரு நாள் கிரிக்கெட் ஐசிசி தரவரிசையில், இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

அதேபோல பேட்ஸ்மேன் வரிசையில் இந்தியாவின் விராத் கோஹ்லி தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார்.

முதலிடத்தில் இந்தியா

இந்திய அணி 119 புள்ளிகளுடன் அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறது. இங்கிலாந்து 2வது இடத்தில் இருக்கிறது. 3வது இடம் ஆஸ்திரேலியாவுக்குக் கிடைத்துள்ளது.

பேட்ஸ்மேன்களில் ஹசீம் ஆம்லா முதலிடம்

பேட்ஸ்மேன் வரிசையில் தென் ஆப்பிரிக்காவின் ஹசீம் ஆம்லா முதலிடத்தில் நீடிக்கிறார். அதே அணியின் டிவில்லியர்ஸ் 2வது இடத்திலும், விராத் கோஹ்லி 3வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

பந்து வீச்சாளர்களில் நம்பர் ஒன் அஜ்மல்

பந்து வீச்சாளர்கள் வரிசையில், பாகிஸதானின் சயீத் அஜ்மல் முதலிடத்தில் இருக்கிறார். முகம்மது ஹபீஸ் 2வது இடத்திலும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் சுழற்பந்து விச்சாளர் சுனில் நரேன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

ஆல்ரவுண்டர்களில் ஹபீஸ் முதலிடம்

ஆல்ரவுண்டர்கள் வரிசையில் பாகிஸ்தானின் முகம்மது ஹபீஸ் முதலிடத்தில் நீடிக்கிறார்.வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் 2வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஷான் வாட்சன் 3வது இடத்திலும் உள்ளனர்.

Story first published: Tuesday, February 12, 2013, 11:15 [IST]
Other articles published on Feb 12, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+