Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பொறி பறக்கப் போகிறது 2015 உலகக் கோப்பை கிரிக்கெட்... ஒரே பிரிவில் இந்தியா, பாக்.!

மெல்போர்ன்: 2015ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான டிரா முடிந்து விட்டது. எந்தெந்த அணிகள் எந்தப் பிரிவில் இடம் பெறுகின்றன என்ற பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது.

பரம வைரிகளாக ரசிகர்களால் பார்க்கப்படும் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே அணியில் இடம் பெற்றிருப்பதால் இப்போதே போட்டி குறித்த எதிர்பார்ப்புகள் 100 டிகிரி செல்சியஸைத் தாண்டி விட்டன.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து இந்த உலகக் கோப்பைப் போட்டித் தொடரை நடத்தவுள்ளன.

நடப்பு உலகச் சாம்பியன் இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

பி பிரிவில் இந்தியா

பி பிரிவில் இந்தியா

இந்தப் போட்டித் தொடரில் இந்தியா பி பிரிவில் இடம் பெற்றுள்ளது.

முதல் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில்

முதல் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில்

முதல் போட்டி நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் பிப்ரவரி 14ம் தேதி நடைபெறுகிறது. அப்போட்டியில் நியூசிலாந்து அணியும், இலங்கையும் மோதவுள்ளன.

மெல்போர்னில் மார்ச் 29ல் இறுதிப் போட்டி

மெல்போர்னில் மார்ச் 29ல் இறுதிப் போட்டி

இறுதிப் போட்டி மார்ச் 29ம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.

இந்தியாவின் நிலை சற்றே பரவாயில்லை

இந்தியாவின் நிலை சற்றே பரவாயில்லை

இந்தியா இடம் பெற்றுள்ள பிரிவில் ரொம்பக் கஷ்டமான அணிகள் என்று எதுவும் இடம் பெறவில்லை. தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகியவைதான் கடுமையான அணிகள். மற்றபடி மேற்கு இந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து மற்றும் ஒரு குவாலிபயர் அணி இடம் பெறுகின்றன.

ஆஸ்திரேலியாவுடன்

ஆஸ்திரேலியாவுடன்

ஆஸ்திரேலியா இடம் பெற்றுள்ள அணியில், நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை, வங்கதேசம் மற்றும் 2 குவாலிபயர் அணிகள் இடம் பெறுகின்றன.

டாப் 4 அணிகள்

டாப் 4 அணிகள்

இரு பிரிவிலும் தலா முதல் இரு இடங்களைப் பிடிக்கும் நான்கு அணிகள் நாக் அவுட் பிரிவுக்கு முன்னேறும்.

மொத்தம் 49 போட்டிகள்

மொத்தம் 49 போட்டிகள்

மொத்தம் 49 போட்டிகள் இடம் பெறுகின்றன. 14 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்.

ஆஸ்திரேலியாவில் 26 -நியூசி.யில் 23

ஆஸ்திரேலியாவில் 26 -நியூசி.யில் 23

ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு, பிரிஸ்பேன், கான்பெரா, ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி ஆகிய நகரங்களில் மொத்தம் 26 போட்டிகள் நடைபெறும். நியூசிலாந்தில், கிறிஸ்ட்சர்ச், ஆக்லாந்து, டுனிடின், ஹாமில்டன், நேப்பியர், நெல்சன், வெல்லிங்டன் ஆகிய நகரங்களில் மொத்தம் 23 போட்டிகள் நடைபெறும்.

பெரும் பூகம்பத்திற்குப் பின்னர்

பெரும் பூகம்பத்திற்குப் பின்னர்

2011ம் ஆண்டு கிறிஸ்ட்சர்ச் நகரை பெரும் பூகம்பம் தாக்கியது. அதில் 185 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னர் முதல் முறையாக கிரிக்கெட் போட்டிகளுக்கு அந்த நகரம் திரும்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸி. பிரதமர் மகிழ்ச்சி

ஆஸி. பிரதமர் மகிழ்ச்சி

போட்டி அட்டவணை, டிரா உள்ளிட்டவற்றை வெளியிட்டு போட்டித் தொடரை திறந்து வைத்த ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் கூறுகையில், ஆஸ்திரேலியாவில் மீண்டும் உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறவிருப்பது மகிழ்ச்சி தருவதாக கூறினார்.

Story first published: Tuesday, July 30, 2013, 12:16 [IST]
Other articles published on Jul 30, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+